பொதுவாகவே 40 வயதை கடந்து விட்டாலே நடந்தால் மூச்சு வாங்குவது என்று சொல்பவர்கள் தான் இன்று அதிகம். இப்படி ஒரு காலகட்டத்தில் 102 வயதிலும் சுறுசுறுப்பாக கால்பந்து போட்டியை பார்க்கும் ஆர்வத்தில் சிறு குழந்தையைப் போல மகிழ்ந்திருக்கும் எலோயிஸ் பிரவுன் என்ற மூதாட்டி தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்றார். ஒரு நூற்றாண்டு கடந்தும் ஆரோக்கியத்தில் அசத்தும் இந்த பாட்டி 100 வயதுக்கு மேல் பால நான்கு விஷயங்களை கூறுகின்றார். அதாவது பலவிதமான உணவு பழக்கங்கள் மற்றும் சிகிச்சை முறைகள் வந்தாலும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் அவசியம் மிகவும் முக்கியமானது. போதுமான தண்ணீர் குடிப்பதால் செரிமானம் மற்றும் மூளை செயல்பாடு மேம்படும். இதனால் நீண்ட ஆயுள் சக்தி கிடைக்கும். நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் அடிக்கடி தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
சுறுசுறுப்பாக இருக்க நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அதிக தூரம் நடக்க முடியாவிட்டாலும் முடிந்தவரை நடக்க முயற்சிக்க வேண்டும். அமர்ந்து கொண்டே வாழ்க்கை முறையை எப்போதும் கழிப்பது நல்லதல்ல. உடற்பயிற்சி உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், வளர்ச்சிதை மாற்ற கோளாறு, இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் போன்ற இறப்பு அபாயத்தை குறைக்கும். உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அனைத்து காரணங்களாலும் ஏற்படும் இறப்பு 30 முதல் 35 சதவீதம் வரை குறையும்.
மகிழ்ச்சியான மனநிலை ஆயுளை அதிகரிக்கும். 102 வயதிலும் ஆரோக்கியத்திற்கு சிரிப்பு மருந்தாக இருக்கிறது. நேர்மறையான எண்ணங்களை ஒருபோதும் இந்த மூதாட்டி விட்டுக் கொடுத்ததே இல்லையாம். எப்போதும் பாசிட்டிவ் ஆக மட்டுமே யோசிப்பாராம். சிரிப்பு என்பது நீண்ட ஆயுளுக்கான மருந்து.
மன அழுத்தம் இல்லாமல் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஏழு முதல் 10 மணி நேர தூக்கம் என்பது மிகவும் அவசியம். மன அழுத்தம் ஒருவரின் ஆயுளை சுமார் 2.8 ஆண்டுகள் வரை குறைக்கவும். நீண்ட கால ஆரோக்கியத்திற்கு மன அழுத்தம் குறையவும் யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகள் செய்வதும் அவசியம். ஆரோக்கியம், சாப்பிடும் முறை, நேரம் போன்றவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சரியான தூக்கம் என்பதும் அவசியம். இதையெல்லாம் பின்பற்றினால் நாமும் 100 வயதுக்கு மேல் வாழலாம்.
