ஆசை ஆசையாக சமைத்து வைத்த கர்ப்பிணி மனைவி… சாப்பாட்டில் உப்பு இல்லாததால் அடித்தே கொன்ற கணவர்… கொலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

By Soundarya on ஆடி 4, 2025

Spread the love

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராமு. இவருடைய மனைவி பிரஜ்பாலா. ஐந்து மாத கர்ப்பிணியான இவர் நேற்று மாலை ஆசை ஆசையாக உணவு சமைத்துவிட்டு தன்னுடைய கணவருக்காக காத்திருந்துள்ளார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ராமு உணவை எடுத்து சாப்பிட்டுள்ளார் .அப்போது உணவில் உப்பு சரியாக இல்லை என்று கூறி மனைவியை கடுமையாக தாக்கியிருக்கிறார். இதனால் மாடியில் இருந்து உருண்டு விழுந்த பிரிஜ்பாலா பலத்த காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். இந்த நிலையில் திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார் பிரிஜ்பாலாவின் சகோதரர், அதாவது ராமுவுக்கு  உறவுக்கார பெண்ணோடு கள்ளத்தொடர்பு இருந்தது. இதனாலே தம்பதிகளுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு ராமு தப்பியோடியுள்ளார். இருப்பினும் அவரை இரவோடு இரவாக கிராம மக்கள் போலீசில் பிடித்து ஒப்படைத்துள்ளார்கள்.