‘கண்ணம்மா’ பாடலில் வரும் நடிகையா இது..? மாடர்ன் உடையில் இப்படி கலக்குறாங்களே… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

By Begam

Published on:

தமிழ் சினிமாவில் ‘கோழிகூவுது’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிஜா ரோஸ். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் மாசாணி, மாதவனும் மலர்விழியும் போன்ற சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

sija9

#image_title#image_title#image_title#image_title#image_title#image_title#image_titleபின்னர் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கிய இவருக்கு 2016ல் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த றெக்க திரைப்படத்தில் மாலா அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

   

இந்த திரைப்படத்தில் ஒரு பெண் ஆசிரியராக நடித்திருப்பார். இவரின் நடிப்பு ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டது. அதோடு மட்டுமின்றி ‘மாலா அக்கா ஐ லவ் யூ’ என்ற ஒரு டயலாக் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டார்.

இதைத்தொடர்ந்து அவருக்கு பல்வேறு திரைப்படங்களில் நடிக்கு வாய்ப்பு கிடைத்தது. நடிகை சிஜா ரோஸ் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார்.

இவர் கன்னடம் மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் அவ்வப்பொழுது தனது மாடர்ன் லுக் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ‘றெக்க படத்தில் ‘கண்ணம்மா’ பாடலில் வரும் நடிகையா இது..?’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.