‘நாங்க பிரிஞ்சிட்டோம்.. அப்பா.. என்னை மன்னிச்சிடுங்க’… கலங்கிய கண்களுடன் வீடியோ வெளியிட்ட நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள்… என்ன நடந்தது தெரியுமா..?

By Begam

Updated on:

நடிகர் ராஜ்கிரனின் மகள் பிரியாவும், நாதஸ்வரம் சீரியல் காமெடி கேரக்டரில் நடித்த முனீஸ் ராஜாவும் திருமணம் செய்து கொண்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இத்திருமணத்திற்கு நடிகர் ராஜ்கிரண் சம்மதிக்கவில்லை . மேலும் அவர் பிரியாவை தனது மகளே இல்லை என்றும், அவர் தனது வளர்ப்பு மகள் என்றும் கூறியது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

   

காதல் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ள ராஜ்கிரணே  காதலுக்கு எதிராக உள்ளது.  முனிஷ் ராஜா பிரியா காதல் வீட்டிற்கு தெரிந்த நிலையில் இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்காத காரணத்தினால், இருவரும் அதிரடியாக ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தனர். இந்நிலையில் கோபம் அடைந்த ராஜ்கிரண் தனது முகநூல் பக்கத்தில் ஒரு மிகப்பெரிய பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்  ‘என் “மகளை”, ஒரு சீரியல் நடிகர் கல்யாணம் பண்ணியிருப்பதாக ஒரு தவறான தகவல் என் பார்வைக்கு வந்தது.

என் மீது அபிமானம் கொண்டுள்ளஅனைவருக்கும், உண்மையை விளக்க வேண்டியது என் கடமை. எனக்கு திப்பு சுல்தான் என்ற நைனார் முஹம்மது என்ற ஒரே ஒரு மகனைத்தவிர, வேறு பிள்ளைகள் கிடையாது. இந்து மதத்தைச்சேர்ந்த ஒரு வளர்ப்பு மகள் இருந்தார். அவர் பெயர் பிரியா. அவர் மனம் சந்தோசப்படுவதற்காக, அவரை “வளர்ப்பு மகள்” என்று நான் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் சொந்த மகள் என்றே சொல்லி வந்தேன். முனீஷ்காந்த் பிரியாவிற்கு கணவராகலாம் அனால் எப்பொழுதும் எனக்கு மருமகன் ஆக முடியாது.

என் வளர்ப்பு பெண் ஒரு தரமான மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்திருந்தால் ஜாதி, மதம் பார்க்காமல் நான் சந்தோசமாக கட்டிக் கொடுத்திருப்பேன். ஆனால் தரம் கெட்ட பணத்திற்காக, எதையும் செய்ய துணியும் ஒருவனை தேர்ந்தெடுத்து தன் வாழ்க்கையை நாசமாக்கி கொண்டாலே என்பது மட்டுமே என் வருத்தம்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்பொழுது ராஜ்கிரணின் மகள் பிரியா, ‘எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை. நாங்கள் பிரிந்து விட்டோம். பிரிந்து சில மாதங்கள் ஆகிறது’ என்று தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் தனது வளர்ப்பு அப்பா ராஜ்கிரனிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். தற்போது ராஜ்கிரனின் மகள் பிரியா வெளியிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….