100 கோடி வீட்டை ஏமாந்து இழந்தேன் ; கண்கலங்கிய மெட்டி ஒலி சாந்தி வில்லியம்ஸ்

By Deepika

Published on:

பாசமான தாயாகவும், கொடுமைக்காரியான மாமியாராகவும் நடிப்பில் அசத்தும் பல நடிகைகள் உள்ளனர். அவர்களில் நமக்கு உடனே நியாபகம் வரும் நடிகை என்றால் அது மெட்டி ஒலி சாந்தி வில்லியம்ஸ் தான். மெட்டி ஒலி ராஜமாய் அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது.

Williams and Shanthi williams

வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி, மலையாளம், தமிழ் என பல மொழி படங்களில் நடித்து பிற்காலத்தில் சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சாந்தி வில்லியம்ஸ். சாந்தி வில்லியம்ஸ் கோவையை சேர்ந்தவர். இவர் மலையாளிக்கு பிறந்தவர். 1979 ஆம் ஆண்டு மலையாள கேமராமேன் ஜெ வில்லியம்ஸை மணந்தார். இவருக்கு 4 பிள்ளைகள்.

   
Williams

இந்த நிலையில் சாந்தி வில்லியம்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் எங்கள் வீட்டை சுற்றி அத்தனை கார்கள் இருக்கும். என் கணவருக்கு கார்கள் வாங்குவது என்றால் மிகவும் பிடிக்கும். அதை அவர் குழந்தைகளாகவே பாவித்தார். அந்த கார்கள் ஒவ்வொரு திசையில் நிற்கும். இவர் எங்கு போக வேண்டும் என சொல்கிறாரோ அந்த திசையில் இருக்கும் காரை எடுத்து டிரைவர் காத்திருப்பார்.

shanthi williams about her loss

1996 க்கு முன்பு படங்களை எடுத்து நஷ்டமாகிவிட்டது. இதனால் கே.கே.நகரில் எனது சொந்த வீட்டை இழந்து குழந்தைகளுடன் நானும் அவரும் நடுரோட்டில் நிற்கிறோம். அன்று நாங்கள் இழந்த வீட்டின் இன்றைய மதிப்பு ரூ 100 கோடி. எப்போதும் ஒரு மனிதன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்குவது எளிது. ஆனால் மீண்டும் பழைய நிலையை அடைய கஷ்டப்பட வேண்டும். அப்படித்தான் நானும் அன்று என் கணவர், குழந்தைகளுக்காக சீரியலில் நடித்து முன்னுக்கு வந்தேன். இன்று எனது பேரன் பேத்திகளுக்காக நடித்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

 

 

author avatar
Deepika