அஜித்தோட மச்சான், மச்சினிச்சிய பாத்துருப்பீங்க… மாமியாரை பாத்துருக்கீங்களா..? வைரலாகும் ஷாலினி அம்மாவின் புகைப்படம்…

By Begam on சித்திரை 15, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஷாலினி .இவர்  நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில்லை. தற்பொழுது இரண்டு பிள்ளைகளுடன், தனது குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொண்டு வருகிறார் நடிகை ஷாலினி.

   

நடிகை ஷாலினிக்கு ரிச்சர்ட் ரிசி என்ற ஒரு சகோதரர் உள்ளார். மேலும் ஒரு சகோதரியும் உள்ளார். இவரின் சகோதரரான ரிச்சர்ட் ரிஷி தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

   

 

மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற திரைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது மூன்றாவது முறையாக அவருடன் கூட்டணி சேர்ந்து படத்தில் இணைய உள்ளார். இவர் தற்பொழுது பிரபல கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்தை காதலிப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

நாம் பலரும் நடிகர் அஜித்தின் மச்சினிச்சி, மச்சான் இவர்களின் புகைப்படங்களை இணையத்தில் அதிகமாக பார்த்திருப்போம். ஆனால் நடிகர் அஜித்தின் மாமியாரின் புகைப்படம் அவ்வளவாக இணையத்தில் வெளியானது கிடையாது. இந்நிலையில் நடிகை ஷாலினியின் அம்மாவின் புகைப்படம் தற்போது இணையத்தில் திடீரென்று வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…