Connect with us

CINEMA

அம்மா எல்லாம் சும்மா…! நான் அதை செய்யணும் Cover-ஆவது போடுங்க’னு கேட்டேன்…! புகை விட்டு சர்ச்சையில் சிக்கிய ஷகீலா ஓபன் டாக் (வீடியோ )…

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் வெற்றிகரமாக 6 சீசன்களை கடந்து 7 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதேபோல தெலுங்கிலும், ஹிந்தியிலும் என பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி வருகிறது. தற்பொழுது தமிழில் 7 வது சீசன் நடைபெறுவதை போலவே தெலுங்கிலும்  பிக் பாஸ் சீசன் 7 நடந்து வருகிறது.

   

இந்த ஷோவில் கவர்ச்சி நடிகையான ஷகீலா மற்றும் நடிகை கிரண் கலந்துகொண்டனர். இவர்கள் இருவரும் தமிழ் பிக் பாஸில் கலந்துகொள்வார்கள் என்று நினைத்து எதிர்பார்த்த நேரத்தில் இவர் தெலுங்கு ஷோவிற்கு சென்று கலந்துகொண்டார். அங்கு இவர் நன்றாக செட் ஆகிவிட்டார். அனைவரிடமும் ஜாலியாக பேசுவதை பார்த்து அனைவரும் அம்மா என்று அழைக்க தனோடங்கினர். தற்பொழுது நடிகை கிரண் போன வாரமே எலிமினேட் ஆகிவிட்டார்.

கிரண் வெளியே வந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் டென்ஷனாக இருந்த நடிகை ஷகிலா அங்கு அதிகம் சிகரெட் பிடித்தார். கிரணைத் தொடர்ந்து அவரும் சமீபத்தில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து பிரபல சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், பிக் பாஸ் வீட்டில் புகை பிடித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ‘ நான் smoking ஏரியா ல மட்டும் தான் சிகரெட் பிடிச்சேன். நான் வெளிய வர்ரதுக்கு 3 நாளைக்கு முன்னாடி தான் இதை அதிகமா காமிச்சாங்க. அம்மா எல்லாம் ஓகே தான். ஆனால் நீங்க எல்லாரும் எனக்கு பசங்க ஆகுறதுக்கு முன்னாடி எனக்கு இருந்த ஒரே friend என்னோட சிகரெட் தானே.  என்னை  என்ன பண்ண சொல்றீங்க? என்கூட 30 வருசமா இருக்குறது இதுதான்.’ என மனம்திறந்து பேட்டியளித்துள்ளார். இதோ அந்த வீடியோ…!

Continue Reading

More in CINEMA

To Top