அழகான முடியை எடுத்து மொட்டை தலையுடன் நடிகை சீதா வெளியிட்ட வீடியோ… ஷாக்காகும் ரசிகர்கள்.. இதுதான் காரணமா…?

By Nanthini on ஆவணி 5, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர்தான் சீதா. 1985 ஆம் ஆண்டு கே பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ஆண்பாவம் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பார்த்திபனுடன் புதியபாதை உட்பட பல வெற்றி படங்களில் இவர் நடித்துள்ளார். சீதா தன்னுடைய நடிப்புக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது மற்றும் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற புகழுக்குரியவர். இவர் பார்த்திபனுடன் இணைந்து புதிய பாதை திரைப்படத்தில் நடித்த பிறகு அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்திபனை பிரிந்ததற்கான அந்தக் காரணத்தை  வெளிப்படையாக கூறிய சீதா | Actress Sita Openly Shared the Reason for  Breaking up with Parthiban after Many ...

   

இந்த தம்பதிகளுக்கு அபிநயா, கீர்த்தனா என்ற இரண்டு மகள்களும் ராக்கி என்ற ஒரு மகனும் உள்ளனர். சீதா மற்றும் பார்த்திபன் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் சில வருடங்களில் இவர்களுடைய காதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இருவரும் பிரிந்து விட்டாலும் தங்களுடைய பிள்ளைகளுக்காக அடிக்கடி சந்தித்து பேசி வருகின்றனர். திருமணத்திற்குப் பிறகு சீதா சினிமாவை விட்டு விலகி இருந்தார். சில வருடங்களில் விவாகரத்து ஆனதும் மீண்டும் நடிக்க தொடங்கிவிட்டார். பிறகு சீரியல் மற்றும் சினிமா என்று நடித்துக் கொண்டிருந்த சீதாவுக்கு சீரியல் நடிகர் ஒருவருடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

   

பார்த்திபனை பிரிந்தது இதற்காக தான்! மனம்திறந்த நடிகை சீதா - லங்காசிறி நியூஸ்

 

ஆனால் அந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்துவிட்ட நிலையில் சீதா தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார். தற்போது மீண்டும் சினிமாக்களிலும் சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் சீதா தன்னுடைய சொந்த ஊரில் இயற்கை விவசாயம் செய்து வருகின்றார். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தன்னுடைய தோட்டத்தில் விவசாயம் செய்யும் வீடியோக்களை அவர் பகிர்வது வழக்கம். தனது youtube சேனலில் பல சமையல் வீடியோக்களையும் இவர் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றார்.

போங்கடா நீங்களும் உங்க ஷோவும்... சட்டென விலகிய சீதா, காரணம்?

அப்படி தன்னுடைய youtube சேனலில் சீதா ஒரு வீடியோவை பகிர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. அதாவது சீதாவிற்கு சுருள் சுருளாக தலைமுடி நீண்டு இருக்கும் நிலையில் தற்போது அவர் தலையை மொட்டை அடித்து உள்ளார். அதற்காக என்ன காரணம் என்று அவர் சொல்லவில்லை என்றாலும் அவருடைய அம்மாவின் இறப்புக்கு பிறகு அவர் சோகமாக இருந்ததால் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது அவருடைய லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.