பொதுவாகவே ஒரு திரைப்படம் வெற்றி அடைய வேண்டும் என்றால் அதற்கு அப்படத்தில் இருக்கும் கதாபாத்திரங்கள் தேர்வு என்பது முக்கியமானதாக இருக்கும். சில படங்களில் கதாபாத்திரங்கள் நன்றாக இருந்தும் கதாநாயகிகள் மற்றும் நடிகர்கள் தேர்வு என்பது சரியாக இல்லாததால் படம் தோல்வியை தழுவியுள்ளது. அதுவே அந்த கேரக்டருக்கு சரியான நபரை தேர்வு செய்து விட்டால் படம் எப்படியோ ஓடிவிடும். அப்படி ஒரு சுவாரசிய சம்பவம் தான் சிவாஜியின் படிக்காத மேதை படத்தில் நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் ப வரிசை படங்களை இயக்கி வெற்றி கண்டவர் தான் இயக்குனர் பீம்சிங். சிவாஜி நடிப்பில் பல வெற்றி படங்களை கொடுத்த இவர் 1960 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் தான் படிக்காத மேதை. இந்தப் படத்தில் சிவாஜி கணேசன் நாயகியாக நடித்திருந்தார்.
இந்தப் படத்திற்கு கதை எழுதியவர் கே எஸ் கோபாலகிருஷ்ணன். இவர் கதை எழுதும்போதே படத்தின் கதாநாயகியாக சவுகார் ஜானகி தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அதன் பிறகு படத்தில் நாயகியாக நடிக்க பத்மினி, சரோஜாதேவி, சாவித்ரி உள்ளிட்ட பல நடிகைகளின் பெயர்களை படக்குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். இதனை கேள்விப்பட்ட கே எஸ் கோபாலகிருஷ்ணன் இந்த கேரக்டர் அன்பு, பாசம் மற்றும் கருணை என அனைத்தையும் நடிப்பில் காட்டக்கூடிய கேரக்டர். இதற்கு சவுகார் ஜானகி தான் பொருத்தமானதாக இருப்பார் என்று தயாரிப்பாளர்களிடம் சொல்ல அவர் பேச்சை யாருமே கேட்பதாக தெரியவில்லை.
அதன் பிறகு சிவாஜியிடம் இந்த படத்தில் யார் நாயகியாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று கேட்க அதற்கு சிவாஜி இந்த கேரக்டரில் சவுகார் ஜானகி நடித்த நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதை கேட்டதும் கே எஸ் கோபாலகிருஷ்ணன் மகிழ்ச்சி அடைந்தார். அவர் என்ன நினைத்துக் கொண்டிருந்தாரோ அதுபோலவே சிவாஜியும் சௌகார் ஜானகியின் பெயரை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த படத்தில் சௌகார் ஜானகி நடித்து அசத்தியிருந்தார். சிவாஜி, எஸ் வி ரங்காராவ், சௌகார் ஜானகி ஆகிய மூன்று பேரும் போட்டி போட்டு நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது
அமெரிக்காவில் உயர்கல்வி முடித்து பணியாற்றி வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் முகம்மத் ஜாபர் உசேன், மசாசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள…
சோனிபட் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன ஆறு வயது சிறுமி, அருகே உள்ள நீர் தொட்டியில் சடலமாக…
டி நகர் வாணி மகால் மேம்பாலம் அருகே ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஊழியரான கார்த்திகேயன் என்பவரிடமிருந்து ரூ 11 லட்சம்…
ஹைதராபாத்தின் அத்தாப்பூர் பகுதியில் உள்ள சிந்தல்மெட் டி-மார்ட் கூட்ரோடு அருகே, இளைஞர்கள் சிலர் காரில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டு…
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…