பணம் இல்லாத நேரத்தில் உதவி கேட்டு வந்த நபர்.. வறுமையிலும் சாவித்திரி செய்த பேருதவி.. பலரும் அறியாத உண்மை சம்பவம்..!

By Nanthini on கார்த்திகை 29, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை சாவித்திரி. இவர் முதன் முதலில் பாதாள பைரவி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரே நேரத்தில் அறிமுகமானார். பிறகு கல்யாணம் பண்ணிப்பார் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த சாவித்திரி ஜெமினிகணேசனுடன் காதலில் விழுந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் இவர் நடித்தாலும் அந்த அளவிற்கு வெற்றி கிடைக்காததால் தயாரிப்பாளராக மாறினார்.

மக்களைக் கவர்ந்தவரின் மரணம் சொன்ன செய்தி! #சாவித்திரி எனும் இறைவி! | Savitri  's life history coming into silver screen - Vikatan

   

அதன்படி 1971 ஆம் ஆண்டு ப்ராப்தம் என்ற திரைப்படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படம் தோல்வியடைந்ததால் இதுவே அவரது கடைசி படமாக அமைந்தது. சாவித்திரி தன்னுடைய வாழ்க்கையில் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு அள்ளிக் கொடுப்பவர். அப்படித்தான் சாவித்திரி இடம் பணமே இல்லாத சமயத்தில் தனது மகளுக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். அதனால் சாவித்திரிக்கு பண உதவி தேவைப்பட்டது. அப்போது ஒரு நபர் சாவித்திரி இடம் உதவி கேட்க வந்துள்ளார்.

   

Actress Savitri : இறுதி நாட்கள் பெரும் துயரம்.. உச்ச நட்சத்திரமாக வலம் வந்த  நடிகை சாவித்ரி நினைவுநாள் இன்று!

 

உடனே சாவித்திரி அவரிடம், நானே என்னுடைய மகளின் திருமணத்திற்கு பணம் இல்லாமல் இருக்கிறேன், இப்படிப்பட்ட சூழலில் உங்களுக்கு எப்படி உதவ முடியும் என்று கூறி அவரை அனுப்பி விட்டார். சில நாட்களுக்குப் பிறகு தயாரிப்பாளர் ஒருவர் சாவித்திரியை ஒரு புதிய திரைப்படத்திற்கு புக் செய்ய அவரிடம் முன்பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட சாவித்திரி சில நாட்களுக்கு முன்பு தன்னிடம் உதவி கேட்க வந்த நபரை அழைத்து அந்த பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார்.

நடிகையர் திலகம் சாவித்ரி குறித்து பலரும் அறியாதா விஷயம் இது... இப்படி ஒரு  பழக்கமா?

உடனே அந்த நபர் உங்களுடைய மகளின் திருமணத்திற்கு பணம் இல்லை என்று சொன்னீங்க இப்போ எனக்கு இந்த பணத்தை கொடுத்து விட்டீர்கள் என்றால் திருமணத்திற்கு என்ன செய்வீங்க என்று கேட்டுள்ளார். அதற்கு சாவித்திரி, இந்த பணத்துடன் நான் வீட்டுக்கு சென்றால் இதனை வைத்து என் மகளின் திருமணத்தை முடிக்க வேண்டும் என தோன்றிவிடும். அதனால் தான் இப்போதே உன்னிடம் கொடுத்து விட முடிவு செய்தேன். என்னுடைய மகளின் திருமணத்தை அந்த ஆண்டவர் பார்த்துக் கொள்வார் என்று கூறி பணத்தை அவரிடம் சாவித்திரி கொடுத்து அனுப்பி வைத்தார். சாவித்திரி பிறருக்கு உதவி செய்வதை தன்னுடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே வைத்திருந்தார் என்பது பலரும் அறியாத உண்மை.