கடந்த சில நாட்களாகவே நடிகர் நாகார்ஜுனா குடும்ப விஷயங்கள் தான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. நாகார்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் நடிகை சோபிதாவை திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியான நிலையில் குடும்பத்தினர் முன்னிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அடுத்த மாதம் இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து நாகார்ஜுனா குடும்பத்தில் அடுத்த திருமணமும் நடைபெற உள்ளது.
அதாவது நாகார்ஜுனாவின் முதல் மனைவியின் பெயர் லட்சுமி. அவரை விவாகரத்து செய்த பிறகு தான் நடிகை அமலாவை இரண்டாவதாக அவர் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு மகன் அதில் லட்சுமிக்கு மகனாக பிறந்தவர் தான் நாக சைதன்யா. அதுபோல அமலாவுக்கு மகனாக பிறந்தவர் தான் அகில். நாகார்ஜுனா போலவே அவருடைய இரண்டு மகன்களும் சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே நாகார்ஜுனா தன்னுடைய இரண்டாவது மகன் அகில் அக்கினேனி திருமணம் குறித்து அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார்.
அதாவது அகில் ஜைனப் ரவ்ஜீ என்பவரை காதலித்து வருவதாகவும் இருவருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. இப்படியான நிலையில் இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் முன்னிலையில் நேற்று முன்தினம் எளிமையாக நடந்து முடிந்தது. அகில் காதலித்து வரும் பெண் ஒரு இஸ்லாமியர். அவர் மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகள்.
ஓவியக் கலைஞரான அவர் கடந்த சில ஆண்டுகளாக அகிலை காதலித்து வந்த நிலையில் இவர்களுடைய காதல் குடும்பத்திற்கு தெரிய வந்ததும் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்த இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இந்த நிலையில் அகிலுக்கு தற்போது 30 வயதாகும் நிலையில் அவருடைய காதலி வயது குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அகிலின் காதலிக்கு தற்போது 39 வயது ஆகிறதாம். அகிலை விட அவருடைய காதலை ஒன்பது வயது மூத்தவர். இவர்களுடைய திருமணம் அடுத்த வருடம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.