கீர்த்தி சுரேஷின் திருமணம் எங்கு, எப்போது தெரியுமா?.. அவரே கொடுத்த அப்டேட்ஸ்.!

By Nanthini on நவம்பர் 29, 2024

Spread the love

மலையாளத்தில் முதன் முதலாக நடித்து அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினிமுருகன், ரெமோ உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார். அதை தொடர்ந்து சூர்யா, விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கின்றார். தமிழ், தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக வளம் வந்த இவருக்கு சமீப காலமாக வெற்றி படங்கள் அந்த அளவுக்கு அமையவில்லை. தெலுங்கில் இவர் நடித்த மகாநடி திரைப்படம் இவருக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்தது.

ஹீரோயினாக நடிக்க வருவதற்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க

   

இருப்பினும் அடுத்தடுத்து திரைப்படங்கள் இவருக்கு சரியாக அமையாத காரணத்தால் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார். இருப்பினும் தனது கையில் அரை டிசைன் படங்களை வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். கடந்த காலங்களில் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த பல செய்திகள் வெளியாகி வந்தது. அதற்கு கீர்த்தி சுரேஷ் நான் இது போன்ற வதந்திகளுக்கு பதில் சொல்வதையே நிறுத்தி விட்டேன். என்னுடைய தேர்வு படங்கள் மட்டும் தான். என் நடிப்பு மீதான விமர்சனத்தை நான் ஏற்றுக்கொள்வேன்.

   

Keerthy Suresh: “15 ஆண்டுகளை கடந்தும் பந்தம்” - காதலை உறுதிப்படுத்தி மாப்பிள்ளையை சொன்ன கீர்த்தி சுரேஷ்!

 

ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை எனது குடும்பத்தை பற்றி யார் கருத்து சொன்னாலும் அது பற்றியே கவலையும் கிடையாது. அது தேவையும் கிடையாது. அவர்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்களின் கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது என்று பதிலளித்திருந்தார். இப்படியான நிலையில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட கால காதலரான மற்றும் தனது குழந்தைப் பருவ நண்பரான துபாயை சேர்ந்த ஆண்டனி என்பவரை திருமணம் செய்யவுள்ளார்.

15 வருட நண்பனை திருமணம் செய்யும் கீர்த்தி சுரேஷ்.. மாப்பிள்ளையின் புகைப்படம் வைரல் - Cinemapettai

இவர்களின் திருமணம் கொச்சியில் டிசம்பர் மாதம் அந்தந்த குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் நடைபெற உள்ளதாக தெரிகிறது. இப்படியான  நிலையில் தனது காதலர் ஆண்டனியை சமீபத்தில் வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தினார் கீர்த்தி சுரேஷ். 15 ஆண்டுகளாக தாங்கள் காதலித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய கீர்த்தி சுரேஷ் வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் , “எனது திருமணம் கோவாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. எனது ஹிந்தி படம் பேபி ஜான் வெற்றியடைய வேண்டும் என சாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன்” என பட அப்டேட் மற்றும் திருமணம் குறித்த அப்டேட்டையும் கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

 

author avatar
Nanthini