Connect with us

CINEMA

பாரிஸ் ஈபிள் டவர் முன் நின்று பேத்தியுடன் ‘வண்ணாரப்பேட்டையில’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட எதிர்நீச்சல் சத்யப்ரியா… இதோ வீடியோ…

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சத்யபிரியா. இவர் அந்த காலகட்டத்தில் இருந்த அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் திரையுலகில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்து அசத்தியவர். இவர் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் குடும்பத்தில் பெண்களை அடக்கும் ஆணாதிக்கம் பிடித்த ஆண்களின் கதையை தோல் உரித்து காட்டுகிறது.

தற்பொழுது இந்த சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை சத்யபிரியா. தற்போது சின்னத்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.  இவர் எஸ்.எஸ்.முகுந்தா என்னும் தயாரிப்பாளரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சத்யபிரியா. இவர் தற்பொழுது தனது பேத்தியுடன் பாரிசில் ஈபிள் டவர் முன் நின்று  ‘வண்ணாரப்பேட்டையில’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top