actor suriya

அந்த நடிகைக்கு ரூ. 1 கோடி சம்பளமா கொடுங்க… என் சம்பளத்துல அதை பிடிச்சுக்குங்க – தயாரிப்பாளரிடம் வெளிப்படையாக சொன்ன நடிகர் சூர்யா!

By Elango on மாசி 12, 2026

Spread the love

அந்த காலத்தில் தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் போன்ற ஜாம்பவான் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சரோஜா தேவி. ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவன தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டில் வெளியான படம் ஆதவன். இந்த படத்தில் சூர்யா நயன்தாரா வடிவேலு அனுஹாசன் ரமேஷ் கண்ணா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் பாட்டி கேரக்டரில் பழம்பெரும் நடிகை சரோஜாதேவியும் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது சம்பளமாக ரூ. 1 கோடி தருமாறும் அதை தனது சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுமாறும் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்த உதயநிதி, சூர்யாவின் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் அவரே ரூ. 1கோடி சம்பளத்தை சீனியர் நடிகை சரோஜா தேவிக்கு வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.