கடந்த 1980 – 90களில் தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. அன்றைய டீன் ஏஜ் வாலிபர்கள் பலரது கனவுகன்னியாக குஷ்பு இருந்தார் என்றால் அது மிகையல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு டிவி சேனலில் நடிகை குஷ்பு நடிகர் சிம்புவை நேர்காணல் செய்தார். அப்போது பேசிய நடிகர் சிம்பு குஷ்புவிடம் கூறுகையில், எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல ஏதோ ஒரு விருது கொடுக்கும் விழாவில் உங்களுக்கு அடுத்து நான் தான் உட்கார்ந்திருந்தேன். எனக்கெல்லாம் அப்ப அவ்வளவு பெருமையா இருந்துச்சு.
உங்க போட்டோவை என் தலையணைக்கு அடியில் வெச்சுட்டுதான் தினமும் நைட்டுல தூங்குவேன். என் அப்பா அம்மாவே இவன் என்ன குஷ்பு மேல இவ்வளவு பைத்தியமா இருக்கான்னு பேசிட்டு இருந்தாங்க. நான் வாழ்க்கையில அதிக முறை பார்த்த படம் உங்களுடையதுதான். நான் நீங்க நடிச்ச வருஷம் 16 படத்தை குறைந்தது 150 தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன் என்று நடிகர் சிம்பு வெளிப்படையாக குஷ்புவிடம் கூறியிருக்கிறார்.
