தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் கமல் நடிப்பில் வெளியான நாயகன் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர். நாயகன், அஞ்சலி என பல ஹிட் படங்களில் நடித்த சரண்யா தற்போது அனைத்து படங்களிலும் நடித்த கேரக்டரில் நடித்து அசத்தி வருகிறார்.
‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது வாங்கியுள்ளார் சரண்யா பொன்வண்ணன். எம்டன் மகன், வேலையில்லா பட்டதாரி, களவாணி, முத்துக்கு முத்தாக, மகளிர் மட்டும், ஒருகல் ஒருகண்ணாடி, கொடி என பல படங்களில் அம்மாவாக நடித்து தன் அபார திறமையை நிரூபித்துள்ளார் சரண்யா. இவர் தன்னுடன் நடித்த பொன்வண்ணனை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகளான பிரியதர்ஷினிக்கு விக்னேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்று முடிந்தது . இவருடைய மகள் பிரியதர்ஷினி சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார். இன்னும் இவருடைய இரண்டாவது மகள் சாந்தினிக்கு சைன்டிஸ்ட்டாக வேண்டும் என்ற ஆசை உள்ளதாம். நடிகை சரண்யா விருகம்பாக்கத்தில் உள்ள தன் வீட்டில் ஒரு பேஷன் டிசைனிங் ஸ்கூல் வைத்துள்ளார் சரண்யா.
படங்களில் நடித்துக்கொண்டே இந்த பேஷன் டிசைனிங் ஸ்கூலில் 300 பேருக்கு பேஷன் டிசைனிங் மற்றும் ஸ்டிச்சிங் சொல்லி கொடுத்து வருகிறார். தற்பொழுது அவர் மிகப்பெரிய அளவில் இதற்காக நிறுவனம் ஒன்றையும் சமீபத்தில் தொடங்கினார். தற்பொழுது இவரின் மூத்த மகளான பிரியதர்ஷினி டாக்டர் படிப்பு முடித்து டிகிரியும் வாங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளரும்…
அதிமுகவில் இருந்து விலகி, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றித் கழகத்தில் இணைந்த மரகதம் குமாரவேல்…
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்காமல் விலகி நின்றதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர்…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு கொடூரக் கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை…
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அல்லம்வாரி தோட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாதவி, அப்பகுதியில் உள்ள…
கர்நாடக மாநிலம் புத்தூர் தாலுகா ஆர்யபு மேர்லாவைச் சேர்ந்தவர் கார்த்திக் சுவர்ண மேர்லா (27). இவர் அப்பகுதி இந்து ஜாக்ரன்…