CINEMA
சிவகார்த்திகேயன் இந்த அளவுக்கு டான்ஸ் ஆட அந்த நடிகை தான் காரணமா..? சுவாரஸ்யத்தை பகிர்ந்த நடிகை..!!
விஜய் டிவி தொகுப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் நடிகை சங்கீதாவிடம் கலா மாஸ்டர் சிவகார்த்திகேயன் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அது எப்படி இருந்துச்சு என கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த சங்கீதா சிவகார்த்திகேயன் எனக்கு ரொம்ப பயப்படுவாரு. அப்போ அவர் ஸ்டேஜ்ல ஆடும்போது நான் நீ இன்னும் சரியா ஆடனும் அப்படின்னு சொல்லுவேன். அவரு கொஞ்சம் ஒரு மாதிரி ஆயிட்டாரு. என்கிட்ட மேம் நான் ஒரு காமெடியன்.
எனக்கு இவ்வளவு தான் வரும். நீங்க அதை ரொம்ப சீரியஸா எடுத்துட்டு என்ன இது பண்ணாதீங்க அப்படின்னு சொன்னாரு. உடனே நான் உங்க பாடில அந்த ரிதம் இருக்கு சிவகார்த்திகேயன். நீங்க கத்துக்கிட்டீங்கன்னா நல்ல பண்ணுவீங்க. இது உங்க ஆப்பர்சூனிட்டி கத்துக்குறதுக்கு. அதனால கத்துக்கோங்க அப்படின்னு சொன்னேன்.
அது ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு சிவகார்த்திகேயன் ரொம்ப ஹார்ட் வொர்க் பண்ணி இருக்காரு. அவருக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்து ஸ்கூல்ல இருந்து என்கிட்ட பேசினாங்க. சிவகார்த்திகேயன் அங்கேயே உட்கார்ந்து அங்கே டான்ஸ் கத்துக்கிட்டு அங்கேயே தூங்கி எந்திரிச்சு ரொம்ப உழைச்சிருக்காரு. ஒரு டான்ஸ் தெரியாத ஆளு பைனலிஸ்ட் ஆகவும் வந்துட்டாரு என ஓபனாக பேசியுள்ளார்.