இந்தியா முழுவதும் உள்ள ஒட்டுமொத்த திரையுலகமும் மிகக் கூர்மையாக கவனித்து வரும் விஷயங்களில் ஒன்றாக இருப்பது தான் மலையாள சினிமா உலகை உலுக்கி கொண்டிருக்கும் ஹேமா கமிட்டி விவகாரம். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் நடிகைகள் பலரும் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.
அதன்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை விசித்ரா தனக்கு நடைபெற்ற தன் எதிர்கொண்ட பாலியல் சேர்ந்த குறித்தும் அதில் இருந்து தன்னை தனது கணவர் எப்படி காப்பாற்றினார் என்பது குறித்தும் கூறி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். மேலும் எந்தவொரு நடிகர்களும் ஹேமா கமிட்டி பற்றி பேச முன்வரவில்லை என்றும் மீடியாக்கள் அவர்களிடம் சென்று இதுகுறித்து ஏன் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும், எனக்குத் தெரிந்த சினிமா உலகில் 100 சதவீதம் யோக்கியர் என்றால் அது நடிகரும் இயக்குனருமான டி ராஜேந்திரன் சாரை தான் சொல்லுவேன் என்று கூறியுள்ளார். டி. ராஜேந்திரன் தான் இயக்கிய படங்களிலும் சரி நடிச்ச படங்களிலும் சரி நடிகைகளை தொட்டதே இல்லை. இதனை ஒரு கொள்கை முடிவாகவே கொண்டவர். அதனைப் போலவே நடிகர் சிவக்குமார் தான் நடித்த நடிகைகளுடன் முத்தக் காட்சியில் நடித்ததே இல்லை என்றும் விசித்ரா கூறியுள்ளார்.