தங்கையின் திருமணத்தில் செம ஆட்டம் போட்ட நடிகை சாய் பல்லவி.. வைரலாகும் வீடியோ..!!

By Priya Ram on செப்டம்பர் 6, 2024

Spread the love

மலையாளத்தில் ரிலீசான பிரேமம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் சாய்பல்லவி. முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார். சாய் பல்லவியின் சொந்த ஊர் ஊட்டி அருகே இருக்கும் கோத்தகிரி. தமிழில் கார்கி, மாரி 2, என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் சாய் பல்லவி நடித்துள்ளார்.

   

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். வருகிற அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி அமரன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அதே நேரம் தெலுங்கில் நாக சைதன்யா உடன் இணைந்து தண்டல் திரைப்படத்திலும் சாய் பல்லவி நடித்து வருகிறார்.

   

 

மேலும் பாலிவட்டில் சரித்திர கதை அம்சம் கொண்ட படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய்பல்லவி சீதையாகவும் நடித்து வருகின்றனர். நடிகை சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை உள்ளார். இவர் ஏஎல் விஜய் இயக்கிய சித்திரை செவ்வானம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூஜா கண்ணனுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இந்த நிலையில்  நேற்று பூஜா கண்ணனுக்கும் அவரது காதலர் வினீத்துக்கும் கோத்தகிரி படுகர் இன பாரம்பரிய முறைப்படி சிம்பிளாக திருமணம் நடந்து முடிந்தது. திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிலையில் சாய் பல்லவி தனது தங்கை பூஜாவுடன் திருமண நிகழ்சியில் மராத்தி பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.