நடிகை சங்கீதாவுக்கு இவ்வளவு பெரிய மகளா?.. அம்மாவுக்கே டஃப் கொடுப்பாங்க போலயே.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!

By Nanthini on சித்திரை 6, 2025

Spread the love

தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சங்கீதா. 1997 ஆம் ஆண்டு வெளியான கங்கோத்ரி என்ற மலையாள திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு வெளியான காதலே நிம்மதி படம் மூலமாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் இவர் பிஸியாக நடித்து வந்தார். குறிப்பாக உயிர், தனம் மற்றும் நேபாளி என வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

சங்கீதா, கிரிஷ் விவாகரத்தா? மாமியார் கேட்ட அந்த கேள்வி..நடிகையின் பளீச் பதில்! | Actress sangeetha krish interview about divorce - Tamil Filmibeat

   

நடிகை சங்கீதாவுக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் தான் பிதாமகன். பாலா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அவருடைய நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது மட்டுமல்லாமல் சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் மாநில விருதும் கிடைத்தது. சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பாடகர் கிரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து வரும் சங்கீதா சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக செயல்பட்டு வந்தார்.

   

நடிகை சங்கீதா க்ரிஷ் ஜோடியின் மகளா இவர்?

 

அது மட்டுமல்லாமல் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்காக இவர் தொகுத்து வழங்கினார்.  தற்போதும் சங்கீதா ஒரு சில நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார். இப்படியான நிலையில் சங்கீதா தனது மகளுடன் சேர்ந்து நடனமாடிய ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சங்கீதாவுக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Sangitha Santharam பதிவைப் பகிர்ந்துள்ளார் (@sangitha.act)