தன்னிகரில்லா உதவியால் நடிகர் ராதாரவியை அழ வைத்த கேப்டன் விஜயகாந்த்.. உருக வைக்கும் சம்பவம்..!

By Nanthini on சித்திரை 6, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்த் தான். தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் வசம் கட்டி போட்டவர். அரசியல் கட்சி தலைவர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் அந்த அளவிற்கு தலைமை பண்பு படைத்தவராக விளங்கினார். சினிமாவிலும் அவருடைய அந்த தலைமை பண்பு பல திரைப்படங்களில் வெளிப்பட்டது. அதற்கு கேப்டன் பிரபாகரன் மற்றும் சின்ன கவுண்டர் போன்ற திரைப்படங்கள் நல்ல உதாரணமாகும். திரை உலகில் கால் பதித்த விஜயகாந்த்திற்கு ஆரம்ப காலகட்டங்கள் கடும் சோதனையாக தான் இருந்தன.

சோறு திங்க தான் வரீங்களா.. கோபத்தின் உச்சிக்கு சென்ற விஜயகாந்த்

   

ஆனால் தன்னுடைய கடுமையான உழைப்பால் அதெல்லாம் தாண்டி முன்னுக்கு வந்த விஜயகாந்த் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அவருடைய திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்டன. இப்படி தமிழ் சினிமாவின் புகழின் உச்சத்திற்கு இருந்த விஜயகாந்த் ஒரு கட்டத்தில் அரசியலில் நுழைந்து கலக்கினார். பிறகு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு என்று கூறலாம். இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.

   

18 films in a single year... Vijayakanth created a record that no one could  have imagined...! | ஒரே ஆண்டில் 18 படங்கள்... யாரும் நினைத்துக்கூட பார்க்க  முடியாத சாதனையை படைத்த ...

 

இப்படியான நிலையில் விஜயகாந்த் பிரபல நடிகர் ராதாரவிக்கு செய்த மிகப்பெரிய உதவி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகளான ராதாரவி தனது தந்தை மறைந்த பிறகு அவருக்காக ஒரு திரு உருவ சிலையை நிறுவ வேண்டும் என்று நினைத்துள்ளார். அதற்கான பணிகள் எல்லாம் தொடங்கி சிலை நிறுவும் பணி முடியும் தருவாயில் இருந்தது. அந்த சமயத்தில் மேலும் 30 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்பட்ட நிலையில் யாரிடம் கேட்பது என்று தெரியாமல் குழம்பிப் போயிருந்தார்.

Actor Radharavi wishes DMDK leader A Vijayakanth a speedy recovery |  'விரைவில் குணமடைந்து வா நண்பா' – விஜயகாந்துக்கு ராதாரவி செய்தி!! | Tamil  Nadu News in Tamil

 

அப்போது தனது நெருங்கிய நண்பர் கேப்டன் விஜயகாந்த்திடம் இது குறித்து பேசிக் கொண்டிருந்தபோது எதைப் பற்றியும் யோசிக்காத விஜயகாந்த் தன்னுடைய நண்பர் ராதாரவி தன்னிடம் பணம் கேட்கவில்லை என்றாலும் முப்பதாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அன்றைக்கு இந்த பணத்தின் மதிப்பு என்பது பெரிய தொகையாக தான் இருந்தது. படம் ஆண்டுகள் கழித்தும் அந்த பணத்தை விஜயகாந்த் திரும்ப கேட்கவே இல்லை. அதன் பிறகு விஜயகாந்த் தயாரித்த உழவன் மகன் திரைப்படத்தின் நடிகர் ராதாரவி நடிப்பதற்கு 75 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில் இறுதியாக அவருக்கு இரண்டரை லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

இத்தனை மனைவிகளா?.. தன் அப்பாவை பற்றி புட்டு புட்டு வைக்கும் ராதாரவி!..  இவ்ளோ ஓப்பனாவா பேசுறது?.. - Cinereporters

இதனால் நெகிழ்ந்து போன ராதாரவி விஜயகாந்தை பார்த்து நான் உனக்கு தர வேண்டிய 30 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொள் என்று கூறினார். உடனே விஜயகாந்த் நீ எனக்கு பணத்தை திருப்பி தருவாய் என்று நான் உனக்கு அந்த பணத்தை தரவில்லை. நான் அது உன்னுடைய தந்தைக்கு செய்யும் மரியாதை என்று விஜயகாந்த் கூறியதும் ஒரு நிமிடம் ராதா ரவி கண்கலங்கி விட்டாராம். இப்படி விஜயகாந்த் தெரிந்தும் தெரியாமலும் பலருக்கும் செய்த உதவிகள் ஏராளம்