நீங்க இப்படியே போனா தமிழ் சினிமா அழிய காரணமாயிடுவீங்க.. தயவு செஞ்சு இதை பண்ணுங்க.. நடிகர்களுக்கு திருப்பூர் சுப்பிரமணியம் வைத்த கோரிக்கை..!

By Nanthini on சித்திரை 6, 2025

Spread the love

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமா சற்று பின்னடைவை நோக்கி செல்கிறது என்று தான் சொல்ல வேண்டும். காரணம் பெரிய ஹீரோக்களின் படங்கள் பெரிய பட்ஜெட்டில் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு ஹிட் கொடுக்காமல் தோல்வியை தழுவுகிறது. ஆனால் சிறிய பட்ஜெட்டில் வெளியாக கூடிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல நடிகர்களும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களும் பலவித முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எம்ஜிஆர் பட பாடலை தொடர்ந்து 50 முறை கேட்ட சிவாஜி!.. என்ன முடிவெடுத்தார்  தெரியுமா?.. - CineReporters

   

இப்படியான நிலையில் தமிழ் சினிமா அழிவுக்கு நீங்க காரணம் ஆயிடாதீங்க என்று சில நடிகர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் என்று அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டியில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய அஜித், ரஜினி மற்றும் விஜய் உள்ளிட்ட நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படம்தான் நடிக்கிறார்கள். அது அவர்களுடைய விருப்பம் தான். இதில் நாம் எதுவும் கருத்து சொல்ல முடியாது.

   

ரஜினி, கமல்... இன்றும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸை ஆளும் நாயகர்கள்! |  actor rajini and kamal the duo rule tamil cinema kollywood here how -  hindutamil.in

 

டெக்னாலஜியை இல்லாத காலத்தில் அதாவது ரஜினி கமல் காலத்திலும் சரி, அதற்கு முன்பு எம்ஜிஆர் மற்றும் சிவாஜி காலத்திலும் சரி வருடத்திற்கு ஒரு ஹீரோ நடிப்பில் 10 படங்கள் கூட வெளியானது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு கூட அஜித் மற்றும் விஜய் காலத்திலும் வருடத்திற்கு நிறைய படங்கள் வெளியாகின. ஆனால் இன்று டெக்னாலஜி வளர்ந்த போதும் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள்தான் வெளியாகிறது. அன்று நடிகர்களின் படங்கள் பார்ப்பதற்காகவே மக்கள் வரிசையாக திரையரங்கிற்கு வந்து கொண்டிருந்தனர். இன்று ஒரு நடிகர் ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறைதான் ஒரு படத்தில் நடிக்கிறார்.

Vijay And Ajith - அஜித்தை இயக்கும் வாய்ப்பு.. தயக்கத்தோடு சொன்ன இயக்குநர்..  விஜய் கொடுத்த செம பதில் | Vijay's reaction to this has been revealed when  Perarasu got the opportunity to ...

அன்று டெக்னாலஜியே இல்லாத காலத்தில் பல வேலை ஆட்களை வைத்து ரொம்ப கஷ்டப்பட்டு வருடத்திற்கு 10 முதல் 15 படங்கள் எடுத்தாங்க. ஆனா இன்னைக்கு நிறைய டெக்னாலஜி இருந்தும் தங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கிடைத்தால் மட்டும் போதும் என்று நடிகர்கள் ஜாலியா இருக்காங்க. இன்னைக்கு இருக்க டெக்னாலஜிக்கு 20 படங்கள் கூட தாராளமா நடிக்கலாம்.

தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்  "திடீர்" ராஜினாமா | TN Theatre Association president Tirupur subramaniam  resigns

அப்படி உங்களால் முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் வருடத்திற்கு இரண்டு படங்களாவது நடிக்க வேண்டும். இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய் , சூர்யா, விக்ரம், தனுஷ், கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் வருடத்திற்கு இரண்டு படங்கள் ஆவது நடிங்கள். இன்று மாதவன் அவரை வளர்த்து விட்ட தமிழ் சினிமாவை விட்டுவிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நடிக்க போய்விட்டார். இப்படியே எல்லோரும் சென்று விட்டால் தமிழ் சினிமாவின் அழிவுக்கு அதுவே காரணமாகிவிடும். உங்களை வளர்த்து விட்ட தமிழ் சினிமாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் வேலை செய்யுங்கள் என்று திருப்பூர் சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.