“எனக்கும் என் குழந்தைக்கும் கிடைத்த பெரும் பாக்கியம்…” ஸ்ரீவித்யா சம்ப்ரதாயத்தில் நடிகை சமந்தாவிற்கு சீமந்தம்… இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்…!!

By Devi Ramu on புரட்டாதி 15, 2026

Spread the love

திரைப்பட நடிகை சமந்தா, தனது கணவர் மற்றும் திரைப்பட இயக்குநர் ராஜ் நிதிமோரு மற்றும் குடும்பத்தினரின் முன்னிலையில் ‘ஸ்ரீவித்யா’ சம்ப்ரதாயப் முறைப்படி சீமந்தச் சடங்கை பாரம்பரியமிக்க முறையில் கொண்டாடியுள்ளார். இந்தச் சடங்கின் போது, ஸ்ரீவித்யா அர்ச்சகர் வழிகாட்டுதலில் “ஸ்ரீ கல்பம்” என்ற சிறப்பு ஆன்மீகச் சடங்கு நடத்தப்பட்டது. அதில் தாய்மை அடைந்துள்ள பெண்ணை தேவியின் வடிவாகக் கருதி, 7 சக்கரங்களையும் 94 கலாக்களையும் புனித நீரினாலும் வேத மந்திரங்களினாலும் தூய்மைப்படுத்தி சுபிட்சம் பெற வேண்டி அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்னர் புனித ஸ்ரீசக்கர யந்திரத்தின் மையப் பகுதியில் அமர வைக்கப்பட்டுத் தேவி கட்கமாலா பாராயண முழக்கங்களுடன் வாழ்த்தப்பட்டார்.

இது குறித்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்த நடிகை சமந்தா, “நமது பண்டைய ஆச்சாரங்கள் மற்றும் வேத மந்திரங்களின் பின்னணியில் இருக்கும் சக்தி அளப்பரியது. இந்தச் சீமந்தச் சடங்கு மூலமாக எனக்கும் எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் தெய்வீகப் பாதுகாப்பும் ஆசிகளும் கிடைத்துள்ளது பெரும் பாக்கியம்” என்று உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.