ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் ஆதோனியைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டுத் தனது அசாத்தியமான நுண்கலை திறமையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். கண்ணுக்கே சரியாகத் தெரியாத மிகச் சிறிய துவரம்பருப்பு தானியம் ஒன்றை மூலப்பொருளாகக் கொண்டு, அதில் கணபதி வடிவத்தை மிக நுணுக்கமாகவும் தத்ரூபமாகவும் செதுக்கி உருவாக்கியுள்ளார்.
பண்டிகை காலத்தில் தனது பக்தியையும் கலைத் திறனையும் இணைத்து இந்த வினோதமான படைப்பை வெளியிட்ட அந்த மாணவனுக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. “சின்னஞ்சிறு வயதில் இதுபோன்ற அபார திறமையை வெளிப்படுத்தும் சிறுவர்களை ஊக்கப்படுத்தினால் எதிர்காலத்தில் பல சாதனைகளைப் படைப்பார்கள்” என நெட்டிசன்கள் வாழ்த்தி வருகின்றனர்.
