வைரலாகும் ‘குஷி’ சூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோ உடன் நடிகை சமந்தா நெருக்கமாக இருக்கும் வீடியோ… அப்படின்னா நாகசைதன்யாவின் முடிவு சரிதானா?….

By Begam on வைகாசி 13, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.நடிகை சமந்தா நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதும், தற்பொழுது இருவரும் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

   

நடிகை சமந்தாவின் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் நடிப்பில் வெளிவந்த ‘யசோதா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

   

 

இதை தொடர்ந்து நடிகை சமந்தாவின் நடிப்பில் இறுதியாக ‘சகுந்தலம் ‘ திரைப்படம் ரிலீஸ் ஆகி வசூலை வாரி குவித்தது.  தற்போது இவர் விஜய் தேவர் கொண்டா உடன் இணைந்து ‘குஷி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  மேலும் ஹிந்தியில் வெப் சீரியஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா.

இந்நிலையில் குஷி திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் தேவர் கொண்டவுடன் சமந்தா நெருக்கமாக இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘அப்படின்னா நாகசைதன்யாவின் முடிவு சரிதானா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ இந்த வீடியோ…