முதன்முறையாக இணையத்தில்…. வைரலாகும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் வளைகாப்பு புகைப்படங்கள்… எவ்வளவு அழகா இருக்காங்க!….

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். இவர் எந்த கதாபாத்திரமானாலும் அசால்ட்டாக நடித்து முடித்து விடுவார். இவர் 80 களில் நடிகையாக வலம் வந்தவர். ஆனால் இன்றும் நடிகையாக அசத்தி கொண்டிருக்கிறார். காலங்கள் கடந்தாலும் இவருக்கு என தனி மார்கெட் இருக்கிறது. இவருக்கு கவர்ச்சி வேடமோ, கடவுள் வேடமோ கண கச்சிதமாக பொருந்தும்.

   

பொதுவாக நடிகையாக இருந்தால் ஒன்னு குடும்ப கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் அல்லது கவர்ச்சியில் காட்டு காட்டு என காட்டுவார்கள். ஆனால் ரம்யாகிருஷ்ணன் இரண்டிலையும் பலே கில்லாடி. 35 வயதிலும் மார்கெட் இல்லாமல் காணாமல் போகும் நடிகைக்கு மத்தியில் 50 வயதைக் கடந்தும் இன்னும் கவர்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார்.

தற்பொழுது நடிகை ரம்யா கிருஷ்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து ஜெயிலர்  திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகை ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனரான கிருஷ்ணவம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

முன்னணி நடிகர், நடிகைகளின் பலரும் பார்த்திடாத அறிய புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்பொழுது வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது நடிகை  ரம்யா கிருஷ்ணனின் வளைகாப்பு புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.