sakshi

சத்தமில்லாமல் திருமணத்தை முடித்த நடிகை சாக்ஷி அகர்வால்… மாப்பிள்ளை யார் தெரியுமா…?

By Meena on ஜனவரி 3, 2025

Spread the love

சாக்ஷி அகர்வால் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமாக நடிகை ஆவார். ஆரம்பத்தில் பெங்களூரில் மாடலாக தனது கேரியரை தொடங்கினார் சாக்ஷி அகர்வால். மாடலிங் செய்து கொண்டிருக்கும்போதே பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசராகவும் பணி புரிந்தார். பின்னர் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

sakshi

   

முதலில் கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்தார் அதற்கு பிறகு தான் தமிழ் சினிமாவில் நுழைந்தார் சாக்ஷி அகர்வால். 2013 ஆம் ஆண்டு “ராஜா ராணி” திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சாக்ஷி அகர்வால். தொடர்ந்து யோகன், ஆத்யன், காலா, விசுவாசம், சின்ட்ரெல்லா, அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சாக்ஷி அகர்வால்.

   

 

இது மட்டுமல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றியிருக்கிறார் சாக்ஷி அகர்வால் மற்றும் பல நிகழ்ச்சிகளில் மாடலாகவும் தோன்றியிருக்கிறார். ஏர் ஏசியா, ஹெப்ரான் பில்டர்ஸ், கல்யாண் சில்க்ஸ், ஏ ஆர் ஆர் சில்க்ஸ், சிஎஸ்சி கம்ப்யூட்டர், மலபார் கோல்டு, பட்டு சாஸ்திரா, சக்தி மசாலா ஆகிய விளம்பரங்களில் தோன்றியிருக்கிறார் சாக்ஷி கர்வால்.

2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 யில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் பிரபலமானார் சாக்ஷி அகர்வால். இவர் கவினுடன் மிகவும் நெருங்கி பழகி வந்ததால் பிரபலமானவர். இந்நிலையில் சாக்ஷி அகர்வால் இன்று சத்தமில்லாமல் தனது குழந்தை கால நண்பரான நவநீத்தை கோவாவில் வைத்து திருமணம் செய்து இருக்கிறார். இதை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர். எதுவுமே சொல்லாமல் பட்டென்று திருமணத்தை முடித்து விட்டீர்களே என்று கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இவர்களது திருமண போட்டோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.