விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் கிட்டத்தட்ட 1300 எபிசோடுகளை தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகின்றது. ஒரு குடும்பத் தலைவியின் கதையை மையமாகக் கொண்டு அவர் சந்திக்கும் போராட்டங்களை அற்புதமாக எடுத்துரைக்கும் வகையில் இந்த சீரியலின் கதைக்களம் அமைந்துள்ளது. தன் கணவர் விட்டு சென்றாலும் தன்னந்தனி ஆளாக நின்று தனது குடும்பத்தையும் குழந்தைகளையும் ஒரு குடும்பப் பெண் எப்படி சுமக்கிறாள் என்பதுதான் மக்கள் மனதை வென்று விட்டது. பல கட்ட திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது கிளைமாக்ஸ் காட்சியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் ராமமூர்த்தி இறப்புக்கு பிறகு கோபி பாக்கியாவை பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் ஒரு கட்டத்தில் அவருடைய உண்மை முகம் குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது. பிறகு ஒருநாள் கோபி நெஞ்சுவலியாய் துடிக்க பாக்கியா உதவிக்கு செல்ல பாக்யா குறித்து கோபி புரிந்து கொள்கிறார். தன் அம்மாவின் வற்புறுத்தல்களுக்கு இணங்க இரண்டாம் மனைவி ராதிகாவை விட்டுவிட்டு முதல் மனைவி பாக்யா வீட்டுக்கு வருகிறார். ஒரு கட்டத்தில் அம்மாவையும் விட்டுக் கொடுக்க முடியாமல் இரண்டாவது மனைவி ராதிகாவையும் விட்டுக் கொடுக்க முடியாமல் தனது இரண்டாவது மனைவி ராதிகாவையும் அவருடைய குழந்தையையும் அழைத்துக் கொண்டு ஒன்றாக சேர்ந்து வாழ பாக்யா வீட்டுக்கு வருகிறார்.
இங்கு பாக்கியா மற்றும் ராதிகா இருவரும் சமாதானமாக போக அதைக் கண்டு ஈஸ்வரி கோபப்படும் நிலையில் கோபி மனதுக்குள் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறார். இப்படி சீரியல் கதைக்களம் ஒன்றுமே இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இதனை பார்த்த நெட்டிசன்கள் ஒரே வீட்டில் இரண்டு மனைவியோட குடும்பம் நடத்துறீங்களா என்று கூறியது மட்டுமல்லாமல் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் வரும் ஒரு பாட்டையும் போட்டு கோபியை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் இது போன்ற ட்ரோல்களை பார்த்த கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சீரியல் கதைக்காக இப்படி போயிட்டு இருக்கு இத வச்சு ரொம்ப அதிகமா நீங்க ட்ரோல் பண்றீங்க. பாக்கியாவை நான் விவாகரத்து பண்ணி விட்டேன். அவங்க இப்போ என்னோட மனசுல ஒரு நல்ல பிரண்டா தான் தெரியுறாங்க. அதேபோல ஒரு பக்கம் அம்மாவையும் விட்டுக் கொடுக்க முடியாமல் ராதிகாவையும் விட்டுக் கொடுக்க முடியாம தான் இப்படி ஒரு முடிவு எடுத்து சீரியல் நல்லா போயிட்டு இருக்கு. இத வச்சி இப்படி ட்ரோல் பண்றது நல்லா இல்ல என்று சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க