கொரோனா என்ற கொடிய நோய் வந்ததற்கு பிறகு மக்களால் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியவில்லை. அதனால் ஆன்லைன் ஆப்புகளின் வியாபாரம் பெருக தொடங்கியது. வீட்டில் இருந்தே மக்கள் எல்லாவற்றையும் ஆர்டர் செய்து வாங்க தொடங்கினர். சில நாட்களுக்கு பிறகு அதுவே மக்களின் பழக்கமாகி போனது. வீட்டில் இருந்து ஆர்டர் செய்யும் வழக்கத்தையே பல மக்கள் விரும்புகின்றனர்.
இதையே மூலதனமாக வைத்து புதிதாக ஆன்லைன் விற்பனை ஆப்புகள் பெருகி வருகிறது. Swiggy, Zomato, Zepto Blinkit, big bazaar, amazon, flipkart என்ன பலதரப்பட்ட ஆப்புகளின் வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆப்புகளும் போட்டிக்கு போட்டியாக புதிது புதிதாக ஆஃபர்கள் புது சேவைகள் என அறிமுகப்படுத்தி வருகிறது.
தற்போது புதிதாக ஆம்புலன்ஸ் சேவையை உருவாக்கி அறிமுகப்படுத்தி இருக்கிறது Blinkit ஆப். ஒரு கிளிக் செய்தால் போதும் 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து விடும். செயலி மூலம் நாம் கோரிக்கை விடும்போது 10 நிமிடங்களில் நோயாளியின் வீட்டு வாசலுக்கு ஆம்புலன்ஸ் வந்துவிடும். இந்த சேவையின் முதல் கட்டமாக ஹரியானாவின் குருகிராமில் இந்த சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது Blinkit ஆப்.
ஐந்து ஆம்புலன்ஸ் உடன் இந்த சோதனையை தொடங்கி இருப்பதாக Blinkit கூறி இருக்கிறது. நமது நாட்டில் முக்கிய நகரங்களில் விரைவான ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பது சிக்கலாக இருக்கிறது. அதற்காகவே இந்த சேவை அறிமுகப்படுத்திருப்பதாக Blinkit தெரிவித்து இருக்கிறது.
இதை கொஞ்சம் கொஞ்சமாக விரிவு படுத்தி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சேவையை கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். இந்த Blinkit ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர், ஊசிகள், முதலுதவிக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆம்புலன்சிற்கு மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். ஏனென்றால் ஆபத்தான அவசரமான நிரையில் அரசின் ஆம்புலன்ஸ் வர தாமதமாகிறது என்றால் இந்த ஆம்புலன்ஸை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பேசி வருகிறார்கள்.