என்ன குத்து குத்துறாங்க-யா.. தங்கச்சியின் நிச்சியதார்த்ததில் செம்ம ஆட்டம் போட்ட சாய் பல்லவி.. வைரலாகும் வீடியோ..

By Mahalakshmi

Updated on:

தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சாய்பல்லவி . சமீபத்தில் இவரின் அன்பு  தங்கை நடிகை பூஜா கண்ணனின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாய்பல்லவி  மிகவும் சந்தோசமாக குத்தாட்டம் போட்ட கலக்கலான வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

   

பிரேமம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனது அழகாலும் நடிப்பு திறமையாலும்  தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகளை பெற்றுள்ளார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சித்திரை செவ்வானம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகை பூஜா கண்ணன் பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த ஒரு படத்தை நடித்துவிட்டு சினிமா வாழ்க்கைக்கு டாட்டா காட்டினார் பூஜா கண்ணன்.

மேலும், பூஜா கண்ணன் Instagram பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து தனது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை ரசிகர்களிடம் பகிர்ந்து வந்துள்ளார். இந்த வகையில் பூஜா கண்ணன் சமீபத்தில் தனது லைப் பார்ட்னரை அறிமுகப்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார்.

இதனை தொடர்ந்து,  சில நாட்கள் முன்பாக கோலாகலமாக நடைபெற்ற  பூஜா கண்ணனின் நிச்சயதார்த்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிச்சயதார்த்த விழாவில் பூஜா கண்ணனின் அக்காவான  நடிகை சாய்பல்லவி மிகவும் குஷியாக போட்ட குத்தாட்டம் டான்ஸ் ரசிகர் மத்தியில் பரவி வைரலாகி  வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Kannan (@poojakannan_97)

author avatar
Mahalakshmi