CINEMA
எதிர்நீச்சல் கதாநாயகிகளின் சம்பளம் இவ்வளவா? உச்சம் தொட்ட ஈஸ்வரி
சன்டிவியில் தினசரி ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் எதிர்நீச்சல். கோலங்கள், சித்தி, மௌனராகம், பாரதி கண்ணம்மா, நாதஸ்வரம், பாண்டியன் ஸ்டோர்ஸ் என ஹிட் அடித்த சீரியல்களுக்குப் பின் சிறிய இடைவெளிக்குப் பின் எதிர்நீச்சல் சீரியல் தற்போது இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமாகப் பார்க்கப்படும் தொடராக உள்ளது.
இதில் வரும் நாயகிகளின் கேரக்டர்களைப் போலவே ஒவ்வொரு இல்லங்களிலும் பெண்கள் உள்ளதால் சும்மாவே சீரியலுக்கு அடிமையாகும் பெண்கள் கூட்டம் இந்த சீரியலை பெரிதும் விரும்ப ஆரம்பித்து விட்டனர். இதுவே இந்த சீரியலுக்கு பெரும் வெற்றியைக் கொடுத்தது.
மேலும் சீரியலில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் எதார்த்தமான நடிப்பும், பரபரப்பு திருப்பங்களும் சீரியலை டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்திற்குக் கொண்டு வந்தது. குறிப்பாக ஆதி குணசேகரனாக மாரிமுத்துவின் நடிப்பு இளைஞர்களிடையே கவனம் ஈர்த்தது. மேலும் நந்தினியாக ஹரிப்பிரியாவும், ரேணுகாவாக பிரியதர்ஷினியும் அந்த கேரக்டர்களாகவே வாழ்கின்றனர். இவர்கள் இருவரின் நடிப்பும் பெண்கள் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது.
தங்கச்சியின் நிச்சியதார்த்ததில் செம்ம குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி.. வைரலாகும் கலக்கலான வீடியோ..
ஆனால் மாரிமுத்துவின் இறப்பிற்குப் பின்னர் டி.ஆர்.பி-யில் சறுக்கலைச் சந்தித்த எதிர்நீச்சல் வேல.ராமமூர்த்தியின் வருகைக்குப் பின் சற்றே சூடுபிடித்துள்ளது. மேலும் அடுத்தடுத்து நடக்குத் திருப்பங்களும், அப்பத்தாவின் மரணமும், கதிர் நல்லவராக மாறுவதும் என எதிர்நீச்சல் மீண்டும் வேகமாக நகர்கிறது. மேலும் இதில் ஜான்சிராணி, கரிகாலன் போன்ற கதாபாத்திரங்களும் சீரியலுக்கு அவ்வப்போது சுவாரஸ்யத்தைக் கூட்டுகின்றன.
தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகைகளின் சம்பள விபரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி கதையின் நாயகியாக வரும் ஜனனிக்கு (மதுமிதா) தினசரி ரூ.15,000 வழங்கப்படுகிறது. மேலும் தமிழில் பைவ் ஸ்டார் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி, எதிரி, வரலாறு போன்ற படங்களில் நடித்துப் பெயர்பெற்ற ஹீரோயினான ஈஸ்வரி (கனிகா) ரூ.12,000 பெற்று வருகிறார். இதனையடுத்து அடுத்த லெவலில் உள்ள நடிகைகளான ரேணுகா (பிரியதர்ஷினி), நந்தினி (ஹரிப்பிரியா) ஆகியோர் ரூ.10, 000ஊதியமாகப் பெறுகின்றனர். மேலும் மூத்த நடிகையான சத்யப்பிரியா ரூ.8000 பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தவிர நடிகர்களில் தற்போது வேல.ராமமூர்த்தி, விபு ஆகியோரும் நாள் எண்ணிக்கையில் குறிப்பிடத்தகுந்த ஊதியம் பெற்று வருகின்றனர்.