தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை சாய் பல்லவி; இவர் 23 வயதில் திருமணம் செய்து கொள்ள ஆசை பட்ட நிலையில் அந்த ஆசை ஏன் நிறைவேறாமல் போனது பற்றி பழைய பேட்டியில் அவர் கூறியுள்ள தகவல் தற்போது அவரது தங்கை பூஜா கண்ணனின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் அந்த பேட்டியை பற்றி மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

நடிகை சாய் பல்லவி, திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நிலையில் தன்னுடைய திருமணத்திற்கு முன்பே, தன்னுடைய தங்கையின் காதலுக்கு பச்சை கொடி காட்டி, திருமண நிச்சயதார்தத்தையும் அமோகமாக நடத்தி வைத்து விட்டார். சமீபத்தில் இவரின் தங்கை, பூஜா கண்ணனின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
மேலும், கூடிய விரைவில் பூஜா கண்ணனின் திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரசிகர்கள் பலரின் கேள்வியாக இருப்பது ஏன்.? சாய் பல்லவி தன்னுடைய திருமணத்தை தள்ளி போடுகிறார் என்பது தான்.
சாய் பல்லவி தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க காரணம், பீக்கில் இருக்கும் இவரது சினிமா கேரியர் தான் என கூறப்படுகிறது. தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ‘டாண்டல்’ படத்தில் நடிக்கும் சாய்பல்லவி, தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக SK 21 படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியிலும், இவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் கூறியதாவது, ‘எனக்கு 18 வயது இருக்கும் போது, 23 வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். 30 வயதிற்குள் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

