அஜீத்துடன் மோதிய ‘அழகி‘.. தட்டுத் தடுமாறி ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்த சுவாரஸ்யம்..

By John

Published on:

Red

சினிமாவில் பள்ளிப் பருவக் காதலை முதன் முதலில் மையப்படுத்தி எடுக்கப்பட்டு வந்த படம்தான் ‘அழகி’. ஒளிப்பதிவாளராக வெற்றி கண்ட தங்கர் பச்சான் இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார். அவருடைய சிறுகதையான கல்வெட்டுகள் என்ற கதையே படமாக வெளிவந்தது. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி, விவேக், மோனிகா, ராம் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் இளையராஜவின் இசையில் உருவான அனைத்து பாடல்களும் காலத்தையும் கடந்து கூடியவை.

இப்படம் பார்த்த பலரும் தங்கள் வாழ்வில் சந்தித்த காதலை எண்ணி கண்ணீர் விட்டனர். அதனால்தான் அழகி திரைப்படம் ஒரு சிறந்த படமாக கருதப்படுகிறது. ஆனால், இப்படம் வெளியான போது வரவேற்பை பெறவில்லை.

   
Azhahi
azazhi

ஏனெனில் 2002-ல் இப்படம் வெளியான போது கூடவே அஜீத் நடித்த ரெட் படமும் வெளியானது. அப்போது அஜீத் தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுக்க ரசிகர் பட்டாளம் அதிகரித்து வந்த நேரம் அது. ரெட் படமும் மதுரை கதைக் களத்தைக் கொண்டதாலும், ஆக்சன் படமாததாலும் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

எதிர்நீச்சல் கதாநாயகிகளின் சம்பளம் இவ்வளவா? உச்சம் தொட்ட ஈஸ்வரி

இதுபற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ள தங்கர்பச்சான் ‘அழகி படம் முடிந்து படத்தை தயாரிப்பாளர் என்னை அழைத்து அசிங்கமாக திட்டினார். படம் ஓடவே ஓடாது. ஆனாலும் உங்கள் வாழ்க்கை இதில் இருக்கிறது. அதனால், சொந்தமாக ரிலீஸ் செய்கிறேன் எனக்கூறி அப்படத்தை வெளியிட்டார்.

Thangar
thangar bachan434 jpg 1585577253

அழகி படம் வெளியான போது அஜித் நடித்த ரெட் திரைப்படமும் வெளியானது. எனவே, அந்த படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு அழகிக்கு தியேட்டரே கிடைக்கவில்லை. மிகவும் குறைவான தியேட்டர்களில் அழகி வெளிவந்தது. தியேட்டருக்கு சென்று பார்த்தால் மிகவும் சொற்பமான ரசிகர்களே இருந்தனர்.

ஆனால், படம் முடிந்த வெளியே வந்த சிலர் அழுது கொண்டே சென்றதை பார்த்ததும் எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. படம் வெளியாகி சில நாட்கள் தியேட்டரில் கூட்டமே இல்லை. அஜித்தின் ரெட் படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, அழகி படத்தை பார்க்க வந்தனர். அதன்பின் பல தியேட்டர்களில் இப்படம் 100 நாட்கள் ஓடியது’ என தங்கர்பச்சான் அந்த பேட்டியில் கூறினார்.

author avatar