இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் அவரது தம்பி நடிகர் ரவி நடித்த முதல் படம் ஜெயம். இந்த படத்தில் நாயகியாக நடிகை சதா தமிழில் அறிமுகமானார். நிழல்கள் ரவி ராஜீவ் பிரகதி ரமேஷ் கண்ணா செந்தில் கோபிசந்த் இளவரசு உள்ளிட்டோர் நடித்த ஜெயம் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது.
இந்த படத்தில் நடித்த பிறகுதான் ஜெயம் ரவி என்றே அவர் அழைக்கப்பட்டார். இப்போது தனது பெயரை ரவிமோகன் என மாற்றிக்கொண்டார். ஜெயம் படத்துக்கு பிறகு அந்நியன் திருப்பதி என பல படங்களில் நடித்த சதா இப்போது சினிமா வாய்ப்பின்றி உள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சதா கூறியதாவது, ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கோபிசந்த் என் கன்னத்தில் நாக்கால் நக்குவது போன்ற ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்.
இதுபோன்ற ஒரு காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என இயக்குனரிடம் பிடிவாதமாக சொன்னேன். ஆனால் அந்த காட்சி கதைக்கு மிகவும் அவசியம் தேவை என்று அவர் சொல்லி என்னை நடிக்க வைத்தார். அந்த காட்சி முடிந்தவுடன் வீட்டுக்கு போய் நான் அழுதேன். அந்த காட்சியை இப்போது நினைத்தாலும் எனக்கு வேதனையாக இருக்கிறது என்று நடிகை சதா கூறியிருக்கிறார்.
