இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் கிஷோர். சிறந்த நடிகர். தொடர்ந்து அசுரன் ஆடுகளம் வெண்ணிலா கபடிக்குழு என பல படங்களில் சிறந்த நடிப்பை தந்திருக்கிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் கிஷோர் கூறியதாவது, வாழ்க்கையில் ரிவர்ஸ் போகிற ஆப்ஷன் இருந்தால் 2014ம் ஆண்டுக்குப் போய் நான் பிரதமரை மாத்திடுவேன். இந்தியாவே மாறி இருக்கும்.
நாட்டில் வெறுப்புணர்வு ரொம்ப ஆபத்தான நிலையில் இருக்கிறது. இப்படியே போனால் இதை மாற்ற பல ஆண்டுகள் ஆகிவிடும். வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் ரொம்பவும் ஆபத்தானவர்கள். அன்பு இல்லைனா எதுவுமே இருக்காது என்று நடிகர் கிஷோர் வெளிப்படையாக கூறியிருக்கிறார். பிரதமர் குறித்து அவர் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
