actor Sivakarthikeyan

நான் தப்பு பண்ணிட்டேன்… 3 படத்துல உங்களை என்கூட நடிக்க வெச்சிருக்க கூடாது – நேரடியாக சிவகார்த்திகேயனிடம் சொன்ன நடிகர் தனுஷ்!

By Elango on மாசி 6, 2026

Spread the love

ஆரம்பத்தில் விஜய் டிவியில் அது இது எது என்ற காமெடி ஷோவை நடத்திய தொகுப்பாளர் சிவகார்த்திகேயன். பிறகு விருது விழாக்களை நீயா நானா கோபிநாத் உள்ளிட்ட சிலருடன் இணைந்து வழங்கினார். அதன்பிறகு நடிகர் தனுஷ் அவருக்கு தனது 3 என்ற படத்தில் தனது நண்பராக நடிக்க வாய்ப்பளித்தார். அதன்பிறகு மெரினா படத்தில் நடித்து சிவகார்த்திகேயன் ஹீரோவாக மாறினார். இப்போது முன்னணி நட்சத்திர நடிகராக உள்ளார்.

ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் 3 படத்தில் நடித்தது குறித்து கூறியதாவது, விஜய் அவார்ட்ஸ் பாத்துட்டு 3 படத்தில் தனுஷ் சார் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். 3 படம் பார்த்துட்டு, உங்களுக்கு சின்ன ரோல் கொடுத்து நான் தப்பு பண்ணிட்டேன். நீங்க இதற்கான ஆள் இல்ல. உங்களோட திறமை வேற. என்னோட கம்பெனிக்கு நீங்க ஹீரோவா ஒரு படம் நடிக்கறீங்களானு கேட்டார். நான் ஓகே சொல்லி செய்த படம்தான் எதிர்நீச்சல் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அப்போது கூறியிருக்கிறார்.