#image_title
திருச்செந்தூர் கோயிலில் போட்டோ எடுக்க நெருங்கி வந்த தூய்மை பணியாளர்களை தள்ளி நிற்க சொன்ன ரோஜாவின் செயல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் மிக பிரபல நடிகையாக வளம் வந்தவர் ரோஜா. 90’ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த இவர் தற்போது படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு அரசியலில் ஈடுபட்டு வருகின்றார். ஒய் ஆர் எஸ் காங்கிரஸ் கட்சியில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த இவர் நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியடைந்து பதவியை இழந்தார்.
இந்நிலையில் நடிகை ரோஜா முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். உலகப் புகழ் பெற்ற முருகன் கோயிலில் ஒன்றான இங்கு சாமி தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. தற்போது ஆனி மாத வர்ஷாபிஷேக விழா நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் நேற்று காலை முதலே கோவில் நடை திறக்கப்பட்டு தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாரதனை எனத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகை ரோஜா வந்திருந்தார். அங்கு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த ரோஜா பின்னர் கோவில் இருந்து புறப்பட்டு சென்றார்.
அப்போது ஏராளமானோர் அவருடன் செல்பி எடுப்பதற்கு ஆர்வம் காட்டி வந்தனர். அனைவருமே ரோஜாவுடன் இன்று செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அப்போது தூய்மை பணியாளர்கள் சிலர் செல்பி எடுக்க விரும்பினார்கள். அவர்கள் அருகில் வந்தவுடன் ரோஜா நெருங்கி வர வேண்டாம் அங்கேயே நில்லுங்கள் என்று கூறிவிட்டார்.
பிறகு சற்று தள்ளி நின்றபடியே தூய்மை பணியாளர்கள் நடிகை ரோஜாவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. தனது அருகில் நின்று செல்பி எடுக்க வந்த தூய்மை பணியாளர்களை தள்ளி நிற்க சொன்ன வீடியோவை பார்த்த பலரும் ஆவேசத்துடன் ரோஜாவிடம் பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…