80ஸ், 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் ரேவதி. கடந்த 1981ம் ஆண்டு ரிலீசான மண்வாசனை திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த திரைப்படத்தை பாரதிராஜா இயக்கினார். பாண்டியன் ஹீரோவாக நடித்தார்.
இதனை தொடர்ந்து புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், உதயகீதம், ஆன் பாவம், ஒரு கைதியின் டைரி, கன்னி ராசி, பகல் நிலவு, மௌன ராகம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் ரேவதி நடித்துள்ளார். ரேவதி நடிகர் சித்ரா லட்சுமணன் உண்டான ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது மண்வாசனை படத்தின் போது நடந்த அனுபவங்களை பகிர்ந்தார்.
ரேவதி கூறியதாவது, மண்வாசனை படத்துல முதல் சீன் சூர்யா காந்தி பூ பின்னாடி நின்னு வெளியே வந்து சிரிக்கணும். அதே நான் ஒரு பத்து தடவை பண்ணி இருப்பேன். மண்வாசனை படத்துல பாடல் காட்சிகள் புடவையை பாவாடை மாதிரி கட்டிட்டு குளிக்கிற சீன் எடுத்தாங்க. நான் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அன்னைக்கு ஷூட்டிங் கேன்சல் ஆயிடுச்சு. அன்னைக்கு நைட் இயக்குனர் என்கிட்ட வந்து கிராமத்துல எல்லாரும் இப்படித்தான் குளிப்பாங்க அப்படின்னு சொன்னாரு.
ஆனா நான் அப்படி குளிக்க மாட்டேன் அப்படின்னு சொன்னேன். அது ரொம்ப காமெடியா இருந்துச்சு. உடனே இயக்குனர் எனக்காக ஒரு நாலு பேர அதே மாதிரி பிரேமுக்கு வெளியில குளிக்க வச்சாங்க. அதனால எனக்கு கூச்சமா இல்ல. ஆனா கேமரா எல்லாம் நான் மட்டும்தான் தெரிவேன். மண்வாசனை படம் பண்ணும் போது எனக்கு தமிழ் தெரியாது. டப்பிங் 7,8 நாள் பேசி இருக்கேன் என கூறியுள்ளார்.