இயக்குனர் பிரேம்குமார் 96 திரைப்படத்தின் மூலம் திரை உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார். 96 திரைப்படத்தில் விஜய் சேதுபதி திரிஷாவும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது அடுத்ததாக கார்த்தியின் 27 படமான மெய்யழகன் திரைப்படத்தை பிரேம்குமார் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த மாதம் 27-ஆம் தேதி மையழகன் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் நேர்காணலில் கலந்து கொண்ட அரவிந்த்சாமி இடம் ரசிகர் மன்றங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அரவிந்த்சாமி என் மகன் ரசிகர் மன்றத்தில் சேர வேண்டும் என என்னிடம் சொன்னால் இதெல்லாம் தேவையில்லை. படத்தை பார்த்தோமா ரசித்தோமா என இருக்க வேண்டும் என்று அட்வைஸ் கொடுப்பேன். என் பயனிடம் இப்படி சொல்லிவிட்டு நானே ரசிகர் மன்றத்தை துவங்கி மற்றவர்களின் பிள்ளைகளை கெடுப்பது எந்த விதத்தில் நியாயம்?
இன்று நான் சினிமாவில் இருக்கிறேன். நாளை சினிமா வேண்டாம் என்று வேறு தொழிலுக்கு கூட செல்வேன். ஆனால் என்னை நம்பி மன்றம் வைத்தவர்கள் என்ன ஆவார்கள். உங்க மகனுக்கு ஒரு நியாயம்? ஊரான் பிள்ளைக்கு இன்னொரு நியாயமா? எனக்கு ரசிகர் மன்றம் வைத்தால் அதனால் ரசிகர் அவர்களுக்கு ஏதாவது பயன் இருக்கிறதா என சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.