ஜில்லுனு ஒரு காதல் ஐஷுவா இது?.. இத்தனை வருஷம் ஆகியும் அப்படியே இருக்காங்களே.. வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ..!!

By Nanthini on செப்டம்பர் 21, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்தவர்தான் நடிகை பூமிகா. பெரும்பான்மையான தமிழ் நடிகைகள் போலவே பூமிகாவும் வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்தவர். தமிழ் மட்டுமில்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு என பழமொழிகளில் பிரபலமான நடிகையாக பூமிகா இருந்துள்ளார். தமிழில் இவர் நடித்த திரைப்படங்களில் பத்ரி மற்றும் ரோஜா கூட்டம் உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை. 2000 ஆம் ஆண்டு முதன் முதலாக யுவகுடு என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் ஹீரோயினியாக பூமிகா அறிமுகமானார். தெலுங்கு சினிமாவை பொருத்தவரையில் அதிகமான கவர்ச்சிகள் இருந்தால்தான் கதாநாயகியாக பிரபலம் அடைய முடியும்.

   

ஆனால் தமிழ் சினிமாவில் கவர்ச்சியை விட நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் இருந்ததால் தொடர்ந்து தமிழில் முயற்சி செய்யத் தொடங்கினார் பூமிக்கா. அதன்படி 2001 ஆம் ஆண்டு வெளியான பத்ரி திரைப்படத்தில் ஹீரோயினியாக அறிமுகமானார். முதல் திரைப்படமே இவருக்கு சிறப்பான திரைப்படமாக அமைந்த நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து ரோஜாக் கூட்டம் திரைப்படத்தில் நடித்த இவர் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். அந்த திரைப்படத்தில் ஐஷு கதாபாத்திரத்தில் நடித்து இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார்.

   

 

அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கிய நிலையில் ஹீரோயினியை தவிர்த்து மற்ற கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கினார். நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக உள்ள Brother திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக பூமிகா வித்தியாசமான லுக்கில் வந்துள்ளார். பல வருடம் கழித்து இவரை திரையில் பார்க்க ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் நிலையில் தற்போது அவருடைய லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Bhumika Chawla இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@bhumika_chawla_t)

 

author avatar
Nanthini