விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா.
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரேஷ்மா தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஓவர் நைட்டில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார்.
இவருடைய புஷ்பா கதாபாத்திரம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த ரேஷ்மா விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இளைஞர்களை கவர்ந்தார்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சீரியல் வாய்ப்பு கிடைத்த நிலையில் சின்னத்திரை நுழைந்தார். அதன்படி விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.
அடுத்தடுத்து இவருக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் தற்போது மக்களின் ஃபேவரட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலில் பயணித்து வரும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் 2 சீரியலிலும் நடித்து வருகிறார்.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது வழக்கம்.
அதன்படி தற்போது சின்ன பொண்ணு போல குட்டையான உடையில் கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.