சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் திருமுருகன் அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் தான் ரெட்ட தல. இந்த திரைப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன்பு சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகளை மேற்கொண்டுள்ளார்.
பிடிஜி யுனிவர்சல் என்ற நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ள நிலையில் இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் அருண் விஜய் இரட்டை வேளத்தில் மீண்டும் நடிக்க உள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன்பாக அருண் விஜய் தடம் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து இந்த திரைப்படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது. இப்படியான நிலையில் இந்த திரைப்படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்த நிலையில் ஒரு பாடல் தனுஷ் பாடியிருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதியதால் தனுஷை பாட வைத்த பிறகு தற்போது அந்த பாட்டிற்கான படப்பிடிப்பு காட்சிகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அருண் விஜய் படத்தில் தனுஷ் பாடியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சமீபத்தில் அருண் விஜய் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் இட்லி கடை திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.