சினிமாவை பொறுத்தவரையில் சில திரைப்படங்களில் நடித்த கதாபாத்திரத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்து விட முடியாது. அதன்படி ஈசன் திரைப்படத்தில் வந்த சிறுவனை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த 2010 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியான ஈசன் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, அபிநயா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்த் இசை அமைத்திருந்தார். குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேட்டியா என்ற பாடல் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலமானது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தில் அபிநயாவின் தம்பியாக வரும் ஒரு குட்டி பையன் தான் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர்தான் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ். ஈசன் திரைப்படத்திற்கு பிறகு இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. இவர் பிரபல நடிகர் ஜெயபிரகாஷ் அவர்களின் மகன். இவர் ஈசன் படத்திற்கு பிறகு சசிகுமார் மற்றும் சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தில் நடித்திருந்தார். அதனைப் போலவே தற்போது துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் அறிமுக இயக்குனர் ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவான வருணன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் எதிர்நீச்சல் சீரியல் பிரபலம் ஹரிப்ரியா, சரண்ராஜ், ராதாரவி மற்றும் கேப்ரியல்லா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த மார்ச் 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. இப்படியான நிலையில் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வர இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஈசன் படத்தில் வந்த சின்ன பையனா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.