தானே மாவட்டத்தில் ஓட்டலில் விபசாரம்: நடிகை மீட்பு, பெண் புரோக்கர் கைது
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் மிரா-பயந்தர் சாலையில் அமைந்துள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் விபசாரச் செயல் நடைபெறுவதாகக் காஷிமீரா காவல் நிலையத்திற்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, காவல்துறையினர் வாடிக்கையாளர்கள் போல மாறுவேடமிட்டு அந்த ஓட்டலுக்குச் சென்றனர். அங்கு நடிகை ஒருவரை விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்காகப் பணம் பெற்ற பெண் புரோக்கர் ஒருவர், போலீசாரின் வலையில் கையும் களவுமாகச் சிக்கினார்.
இதனைத் தொடர்ந்து, ஓட்டல் அறைகளில் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தி, அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 35 வயது நடிகையைப் பத்திரமாக மீட்டனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும், ஜோகேஸ்வரி பகுதியில் வசித்து வந்த தபசும் (39) என்ற பெண்ணைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காஷிமீரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், இந்தச் செயலில் தபசுமுடன் தொடர்புடைய முக்கிய ஆண் கூட்டாளி தலைமறைவாகியுள்ளதால், அவரைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…
கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…
நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…
டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…
சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…