இந்தி சினிமாவில் உச்சத்தில் இருந்த பிரபல நடிகை ஜெமினி கணேசனின் மகளா?

By vinoth on ஐப்பசி 3, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் கோலோச்சிய காலத்தில் சைலண்ட்டாக தனக்கென ஒரு பாதையை உருவாக்கி மூன்றாம் இடத்தைப் பிடித்தவர் ஜெமினி கணேசன்.. தன்னுடன் நடித்த நடிகையான சாவித்ரியை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். சினிமாவில் இருவரும் பிஸியான நடிகராக வலம் வந்தார்கள்.

ஆனால் சாவித்ரியை திருமணம் செய்துகொண்ட போதும் அவரது காதல் ஓய்ந்தபாடில்லை. அதன் பின்னரும் அவர் சில பெண்களோடு உறவில் இருந்ததால் சாவித்ரி அவரைப் பிரிந்தார். அதே போல ஜெமினி கணேசன் சாவித்ரியை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்ட போது அவரின் முதல் மனைவி பாப்ஜி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையாம். ஏனென்றால் அவருக்கு ஜெமினி கணேசனைப் பற்றி நன்கு தெரியுமாம்.

   

Gemini Ganesan and Rekha

   

ஆனால் அவரின் இரண்டாவது மனைவியான புஷ்பவல்லிதான் அதை கடுமையாக எதிர்த்தாராம். ஆனாலும் ஜெமினி கணேசன் சாவித்ரியோடு ஒன்றாகதான் வாழ்ந்து வந்தார். அதனால் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற புஷ்பவல்லி ,சினிமா படப்பிடிப்பில் இருந்த சாவித்ரி மேல் காரை ஏற்றி கொல்லும் அளவுக்கு சென்றுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக சாவித்ரிக்கு அன்று ஒன்றும் ஆகவில்லை. சாவித்ரி உடனான உறவால் ஜெமினி கணேசன் கொஞ்சம் கொஞ்சமாக புஷ்பவல்லி உடனான உறவை முறித்துக் கொண்டதுதான் இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.

 

Gemni Ganesan and Rekha

ஒரு கட்டத்தில் புஷ்பவல்லி ஜெமினி கணேசனை நிரந்தரமாகப் பிரிந்து பம்பாய்க்கு போய் செட்டில் ஆகிவிட்டார். ஜெமினி கணேசன் சாவித்ரிக்குப் பிறகு பெண்களில் ஒருவர்தான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகையான ரேகா. ஆனால் ஜெமினி மேல் உள்ள கோபத்தில் முதலில் அதை வெளிப்படுத்தவே இல்லையாம் புஷ்பவல்லி. ஆனால் ரேகா தன்னுடைய தந்தை ஜெமினி கணேசன் பற்றி நேர்மறையாகவே பல நேர்காணல்களில் பேசியுள்ளார். ரேகா, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனைக் காதலித்ததாகவும், ஆனால் அந்த காதல் கைகூடாததால் அவர் திருமணமே செய்துகொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.