தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாகி, இந்திய மொழிகள் பெரும்பாலானவற்றில் நடித்து உலக நாயகனாக இன்று திகழ்கிறார். அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 65 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
கமல்ஹாசனின் போட்டியாளரான ரஜினிகாந்த் எம் ஜி ஆர் வழியைப் பின்பற்றிய நிலையில் கமல், சிவாஜியின் வழியில் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்தார். அதனால் அவரின் பல படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெறாமல் தோல்வி அடைந்தன. ஆனால் காலம் சென்று அந்த படங்கள் இன்றும் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல தோல்வி படங்கள் காலம் தாண்டி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.

aalavanthan movie clip
ராஜபார்வை, விக்ரம், குணா, ஹேராம், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், மகாநதி, சதி லீலாவதி, தெனாலி, பஞ்ச தந்திரம் என கமல்ஹாசனின் பல படங்கள் இன்றும் கொண்டாடப்பட்டாலும், இந்த படங்கள் ஏதோ ஒரு வெளிநாட்டு படத்தின் காப்பி அல்லது தழுவல் என்பது கமல்ஹாசன் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாக உள்ளது. இது சம்மந்தமாகக் கமல்ஹாசனே தன்னுடைய படங்கள் பல படங்களின் பாதிப்பில் உருவானவைதான் என்று கூறியுள்ளார்.

KIll bill movie clip
ஆனால் கமல்ஹாசன் எடுத்த ஆளவந்தான் படத்தின் ஒரு முக்கிய அம்சத்தை ஹாலிவுட் இயக்குனர் குயிண்ட்டன் டாரண்டினொ தன்னுடைய படத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்பது பலரும் அறியாதது. ஆளவந்தான் படத்தில் வன்முறையானக் காட்சிகளை எல்லாம் கமல்ஹாசன் கார்ட்டூன் வடிவில் காட்டியிருப்பார். இதே ஸ்டைலை டாரண்டினோ தன்னுடைய “KILL BILL” படத்தில் பயன்படுததிக் கொண்டார். மேலும் தனக்கு அதற்கான உந்துதல் ஆளவந்தான் படத்தில் இருந்துதான் கிடைத்தது எனவும் அவர் வெளிப்படையாக சொல்லியும் உள்ளார்.
