புத்தம் புது சீரியல்களை களமிறக்கும் விஜய் டிவி.. சீரியல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்..!!

By admin on ஐப்பசி 3, 2024

Spread the love

விஜய் டிவி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல், சிங்க பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள் ஆகிய சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக இடங்களை பிடித்திருக்கும். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் லிஸ்டில் இருக்கும்.

   

சன் டிவியில் ஒளிபரப்பான இனியா, மலர், மிஸ்டர் மனைவி, சுந்தரி ஆகிய சீரியல்களை முடிக்க போவதாக இணையத்தில் செய்திகள் உலா வருகிறது. சன் டிவியில் புதுப்புது சீரியல்களை களமிறக்கி வருகின்றனர். நேற்று புனிதா என்ற சீரியல் ப்ரோமோ வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

   

 

விஜய் டிவியை பொறுத்தவரை சிறகடிக்க ஆசை பாக்கியலட்சுமி ஆகிய சீரியலுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் நீண்ட நாட்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியல் முடிவுக்கு வரப்போகிறது. அடுத்து நான்கு புதிய சீரியல்களை விஜய் டிவி களமிறக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Muthazhagu - Disney+ Hotstar

டெலி பேக்டரி, வீனஸ் இன்ஃபோடைன்மென்ட், குளோபல் வில்லேஜஸ் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் புத்தம் புது சீரியல்களை விஜய் டிவி தொடங்க உள்ளது. அந்த தொடர்களின் இயக்குனர், நடிகர்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இது குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது