பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா கடந்த 2016-ஆம் ஆண்டு கன்னடத்தில் ரிலீசான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்து திரையுலகில் என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ரக்ஷித் செட்டிக்கு ஜோடியாக நடித்தார். முதல் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் விஜய் தேவர கொண்டாவுடன் ராஷ்மிகா இணைந்து நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
விஜய் தேவர கொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையே காதல் இருப்பதாக இணையத்தில் செய்திகள் உலா வரும். ஆனால் நாங்கள் காதலிக்கவில்லை என இருவரும் கூறி வருகின்றனர். ஆனால் புஷ்பா -2 ஆடியோ லாஞ்சில் இருவரும் காதலிப்பது உறுதியாகிவிட்டது.தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் ராஷ்மிகா நடித்தார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ராஷ்மிகா நடித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ஹிந்தியில் ராஷ்மிகா நடித்த அனிமல் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்து குபேரா படத்தில் நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், டான்ஸ் ஆடும் போது எடுத்த வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிடுவார். இந்நிலையில் ராஷ்மிகா காலில் அடிபட்டு வீல் சேரில் சேரும் வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…