தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்த வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர். இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் இவர் முதல் முறையாக நடிகையாக அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் மற்றும் கருணா சொல்லிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
சூர்யாவின் 2d என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிதி சங்கர் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்து விட்டார்.
அதனைப் போலவே இந்த திரைப்படம் அவருக்கு நல்ல ஒரு அறிமுக படமாக அமைந்ததால் தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் தேடி வந்தது.
அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருந்து வருகின்றார்.
இவர் இறுதியாக முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி நடித்திருந்த நேசிப்பாயா என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
பின்னணி பாடகியாகவும் கலக்கி வரும் அதிதி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார். இதனைத் தொடர்ந்து கையில் ஏகப்பட்ட படங்களுடன் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அதிதி சங்கர் இணையத்திலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை இவர் பகிர்ந்து வரும் நிலையில் தற்போது தனது முடியை கலர் செய்து ஸ்டைலிஷ் லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…