இந்தியாவின் தபால் அலுவலகங்களில் மக்களின் சேமிப்புக்காக பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. இதில் சரியான திட்டங்களை தேர்ந்தெடுத்து டெபாசிட் செய்தால் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தை பெற முடியும். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சேமிக்க வேண்டும் என்ற நிலை இருப்பதால் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்தது. பாதுகாப்பான டெபாசிட் நல்ல வருமானம் தபால் அலுவலக திட்டங்கள் மூலம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் கூடுதல் சிறப்பாக போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் ரிஸ்க் எதுவும் கிடையாது.
அஞ்சல் அலுவலகங்களில் கிராம புற மக்களுக்காக கிராம சுரக்ஷா யோஜனா என்ற திட்டம் செயல்பாட்டில் உள்ளது. போஸ்ட் ஆபீஸில் கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரசியாகமாக கிராமப்புற மக்களுக்காக இந்த திட்டம் உள்ளது. தினமும் வெறும் ஐம்பது ரூபாய் டெபாசிட் செய்வதன் மூலமாக மெச்சூரிட்டியாக 35 லட்சம் ரூபாய் தொகையை முதலீட்டாளர் பெறலாம். 19 வயது முதல் 55 வயதான யாராக இருந்தாலும் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் டெபாசிட் செய்யலாம்.
இதில் குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையாக 10 ஆயிரம் ரூபாய் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாயும் இந்த திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பிரீமியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் தினமும் 50 ரூபாய் வீதம் மாதம் தோறும் 1500 ரூபாய் ஒருவர் டெபாசிட் செய்தால் 35 லட்சம் வரை ரிட்டனாக பெற முடியும். இதுவே 55 ஆண்டுகளுக்கு என்றால் மாதம் தோறும் 1515 ரூபாய் தொகையும், 58 ஆண்டுகளுக்கு 1463 ரூபாய் மாதம் தோறும் முதலீட்டாளர் டெபாசிட் செய்ய வேண்டும். 60 ஆண்டுகளுக்கு ஒருவர் 1411 ரூபாய் ப்ரீமியம் செலுத்த வேண்டும்.
இந்த திட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கடன் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது. பாலிசி தொடங்கிய நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் சரண்டர் செய்யலாம். ஐந்து வருடங்களுக்குப் பிறகு போனஸ் தொகையும் கிடைக்கும். இந்த திட்டத்தில் முதலீட்டாளர் என்பது வயதை எட்டும் போது மொத்த பாலிசி தொகையும் சரண்டர் செய்யப்படும். எனவே குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்த திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திரைத்துறையினரின் அரசியல் வருகையும் கருத்துகளும் விவாதப்…
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 17) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.…
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதாவுக்கு எதிராகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாகக் களமிறங்கி தனது கடுமையான…